search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையர்கள் 2 பேர் உருவம் கேமராவில் பதிவு
    X

    கொள்ளையர்கள் 2 பேர் உருவம் கேமராவில் பதிவு

    • மூதாட்டி காதுகளை அறுத்து கம்மல் பறித்த வழக்கில் போலீசார் விசாரணை
    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர்அடுத்த கந்திலி அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தையொட்டி சாணிப்பட்டி கொல்ல கொட்டாய் பகுதி உள்ளது.

    இந்தப்பகுதியில் வசிப்பவர் தனபாக்கியம் (வயது 60). இவரது கணவர் சின்னப் பையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனியாக வசிக்கும் தனபாக்கியம் அவரது நிலத்தில் பயிரிட்டு வருகிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வீடு 200 அடி தொலைவில் உள்ளது. இவர் அவரது மனைவி கோமதி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனபாக்கியம் வீட்டிற்கு 2 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் தனியாக இருந்த தனபாக்கியம் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது தனபாக்கியத்தை தாக்கி கம்மலுடன் காதுகளை அறுத்து சென்றனர்.அப்போது அவர்களில் ஒருவன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி தனபாக்கியத்தின் வாயை அமுக்கவே மற்றொருவன் தனபாக்கியம் அவருடைய இரண்டு காதுகளையும் ஒரு பவுன் தங்க கம்மலுடன் கத்தியால் ரத்தம் சொட்ட சொட்ட அறுத்து கழுத்து, வயிறு பகுதிகளிலும் கத்தியால் கிழித்து விட்டு தங்க கம்மல்களுடன் தப்பினர்.

    ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த தனபாக்கியத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது மகன் தமிழ்ச்செல்வன், மருமகள் கோமதி ஆகியோர் வந்தனர். அவர்களிடம் கதறியவாறு தனபாக்கியம் கூறிக்கொண்டிருந்தபோதே அவர் மயக்கம் அடைந்துள்ளார். தனிப்படை அமைத்து விசாரணை உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனபாக்கியத்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த இடத்தின் அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை இருப்பதால் காதை அறுத்து சென்றவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களா என்பது குறித்தும், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் இரண்டு வாலிபர்களின் படம் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    எனவே குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×