search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspect"

    • தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர்
    • தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் காவிரி ஆறு செல்கிறது. ஆற்றில் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை பாதுகாக்கும் வகையில், அந்த பகுதியை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். மாயனூர் கதவணை, காவிரி ஆற்று படுகை பகுதிகள், அதிகம் தண்ணீர் செல்லும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • கோவில்பட்டி - கடம்பூர் ெரயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் இரட்டை ெரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன.
    • புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறி யாளர் சித்தார்த்தா இன்று ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    கோவில்பட்டி - கடம்பூர் ெரயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் இரட்டை ெரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    இந்த புதிய மின்மய இரட்டை ெரயில் பாதையில் தெற்கு ெரயில்வே தலைமை முதன்மை மின் பொறி யாளர் சித்தார்த்தா இன்று ஆய்வு செய்தார்.

    கடம்பூர் ெரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு ெரயில் மூலமாக காலை 10.30 மணிக்கு ஆய்வை தொடங்கினார்.

    வழியில் ெரயில்வே கேட்டுகள், கடம்பூர் உபமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அவருடன் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதன்மை மின் வழங்கல் பிரிவு பொறியாளர் சுந்தரேசன், மின் மயமாக்கல் பிரிவு பொது மேலாளர் ராமநாதன், ெரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தப் புதிய இரட்டை ெரயில் பாதையை நாளை (புதன்கிழமை) பெங்களூர் தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய இருக்கிறார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    • அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    • நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வார்டுக்கு ட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நெல்லை மண்டல உதவிகமிஷனர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் பட்டுராஜன், சுதாகர் அலுவலகர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
    • போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என சுற்றிலும் பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
    • தடாகோவில் பகுதியில் நாளை நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மின்சாரத்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். அடுத்த கட்டமாக மீதமுள்ள விவசாய பெருமக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய விவசாய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


    • கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
    • ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை தொடங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டது.

    இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஆர்.டி.ஓ.வுக்கு மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நடத்து வதற்கு மனு கொடுத்தார்கள்.

    இதனையடுத்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வின்போது கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் உஷாராணி மற்றும் வருவாய் துறையினர், இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வுக்கு பிறகு பொதுமக்கள் இடையே ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் கூறுகையில், ஆய்வின் முடிவுகளை கலெக்டருக்கு அனுப்பப்படும். அவரது அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • நெல் கொள்முதல் நிலையங்களில் சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு செய்தனர்
    • ஆவணங்கள் இல்லாததால் 29 டன் நெல் பறிமுதல்

    திருச்சி:

    தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரவை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நெல் நேரடி கொள்முதல் செய்வதில் வெளிமாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்களின் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் எடுத்து வருவதாகவும், அரிசி ஆலைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின்(சிவில் சப்ளை சி.ஐ.டி.) டி.ஜி.பி. ஆகாஷ் குமார் மேற்பார்வையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் ஆவணங்களுடன் எடுத்து வரப்படுகிறதா? என மாவட்ட எல்லைகள் மற்றும் சோதனை சாவடிகளில் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 29.5 டன் நெல் மூட்டைகள் 3 லாரிகளுடன் பிடிபட்டது. பின்னர் அதனை நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் வசம் ஒப்படைத்தனர். மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை பிடித்து அந்த லாரி ஓட்டுனர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமல்லாமல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக டி.ஜி.பி. ஆகாஷ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட உட்பட்ட மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், சரவணன் என்பவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையையும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடை–பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்
    • பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் குன்னம் தாலுகா ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த தையல் தொழிற்சாலையையும், பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தையும்,

    முத்துநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தையும், குன்னம் தாலுகா பரவாய் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், உதவி மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.
    • உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி கோவில் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜமுத்து, ராஜேந்திரன் உட்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு 36 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ரோஸ்மில்க்கில் அதிக கலர் சேர்த்த 7 லிட்டர் ரோஸ் மில்க், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி குருனை 3 கிலோ, பேக்கிங் செய்யப்படாத, தேதி இல்லாத பால்கோவா பாக்கெட்டுகள் 15 கிலோ, தெர்மாகோல் கப் 100 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


    • இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடைபெற்றது.
    • நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2000 வங்கி கடன் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடைபெற்றது.

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் சட்டப் பணிகள் ஆணை குழுக்களால் 25 பேர் கொண்ட அமர்வுகளுடன் இன்று நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குமரகுரு தலைமையில் நடைபெற்றது.

    இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன் மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், தீபா, குமரேசன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று நடைபெற்ற இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடியக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதேபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2000 வங்கி கடன் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணமாக காசோலைகளும் வழங்கப்பட்டது.

    கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் வனவாசியில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகள், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறைகளின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக வனவாசிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புயலுக்கு முன்னதாகவே 82 ஆயிரம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது 371  நிவாரண முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    70 கால்நடைகள், 297 செம்மறி ஆடுகள், 188 ஆடுகள், 30 காட்டுவிலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  அவற்றை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த புயலால் 105 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது, அவற்றை சீரமைக்கும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொற்று நோய்கள் பராவமல் தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


    புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
    ×