டவுன் 16-வது வார்டு பகுதியில் மேயர் சரவணன் அதிரடி ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
டவுன்- குற்றாலம் ரோட்டில் மேயர் சரவணன் ஆய்வு செய்த காட்சி.
டவுன்- குற்றாலம் ரோட்டில் மேயர் சரவணன் ஆய்வு செய்த காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வார்டுக்கு ட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது நெல்லை மண்டல உதவிகமிஷனர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் பட்டுராஜன், சுதாகர் அலுவலகர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com