search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Army"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பந்திபோரா மற்றும் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பொதுமக்களை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அதன்பின்னர் சண்டையின்போது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதேபோல் சோபியான் மாவட்டம் இமாம்சாகிப் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. #JKEncounter #MilitantsKilled
    ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. #PakDrone
    ஜெய்ப்பூர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். 

    இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்று விட்டது. மீண்டும் இந்திய எல்லைக்குள்  வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakDrone
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் மூன்றாவது நாளாக இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #RajouriLoC #IndianArmy
    ஜம்மு:

    நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்று பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது கடந்த சனிக்கிழமை மாலை சுமார் நான்கரை மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.

    இதே பகுதியில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லைகோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலையும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #RajouriLoC #IndianArmy
    ஜம்மு:

    நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்று பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது நேற்று மாலை சுமார் நான்கரை மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை சுமார் 5.15 மணியளவில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ஜம்முவில் இருந்து வரும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #Pakistanfires #RajouriLoC #IndianArmy
    பனிப் பொழிவினால் சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். #IndianArmy #SikkimTourists
    கேங்டாக்:

    வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நீடித்தது.


    இதுபற்றி தகவல் அறிந்த ராணுவ வீரர்கள், அங்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. #IndianArmy #SikkimTourists
    ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். #JammuKashmir #CrossBorderFiring
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ராமன் சர்மா எழுப்பியுள்ள கேள்விக்கு ராணுவ அதிகாரி ஒருவர் பதிலளிக்கையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறல், ஊடுருவி தாக்குதல் போன்ற பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



    பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 3 ஆண்டுகளில் இப்படி பல்வேறு தாக்குதல்கள் நடத்தியதில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்களும் அடங்குவர். மேலும், 565 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு அதிகபட்சமாக 1535 தடவையும், 2017-ல் 971 தடவையும், 2016-ல் 449 தடவையும் எல்லையில் ஊடுருவி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CrossBorderFiring
    பாக். ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முதல் மந்திரி கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh #ArvindKejriwal
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்றார்.



    அரியானாவில் சோனிபேட் பகுதியில் உள்ள நரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    மேலும், சர்ஜிகர் ஸ்டிரைக் நாளை கொண்டாட முடிவு செய்துள்ள பிரதமர் மோடி, கொல்லப்பட்ட படைவீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
    பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங்கின் மகன், அரசு தங்களது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நரேந்திர சிங்கின் மகன் மோஹித் குமார் உருக்கமாக கூறியதாவது,



    எனது தந்தையின் அர்பணிப்பு பெருமைபடக்கூடிய விஷயம். யாரும் இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்வதில்லை. நம்மால் பெருமை படாமல் இருக்க முடியாது. இன்று நாம் பெருமைப்படுவோம். நாளை யாராவது கொல்லப்படுவார்கள்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நானும் எனது அண்ணும் வேலை இல்லாதவர்களாக இருக்கிறோம். என் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளார். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh

    அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #Hockey #IndianArmy
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மத்திய செயலகம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி), பஞ்சாப் சிந்து வங்கி-பெங்களூரு ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. 
    கேரளாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #IndianArmy
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

    அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.



    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு தலா 65 ராணுவ வீரர்கள் தனித்தனியக பிரிந்து 10 மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பொறியாளர் அதிரடிப்படையும் 10 குழுக்களாக சென்று மீட்பு பணிக்கு உதவியாக பணியாற்றி வருகின்றனர்.

    வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் 13 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 22 வெளிநாட்டவர்கள் உள்பட 3627 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை படகு மூலமாகவும் ராணுவம்  மீட்டு வருகிறது. இதற்காக 53 ராணுவ படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்  சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவம் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  #KeralaRains #KeralaFloods #StandWithKerala #IndianArmy
    நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி சிக்கிமில் உள்ள நாது லா எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். #IndependenceDayIndia
    சிக்கிம்:

    நாட்டின் 72-வது சுதந்திரம் இன்று நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றினர்.

    இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையான நாது லா பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது, இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. 
    பாகிஸ்தான் எல்லையில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு இந்திய ராணுவத்தினர், பரிசுகள் வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். 

    இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து கடந்த 24 ஆம் தேதி, மொகமது அப்துல்லா என்னும் 11 வயது சிறுவன் ஒருவன் வழிதவறி, இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். இந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை காஷ்மீர் போலீசார் செய்தனர். கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீசாரிடம் இருந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை ஒப்படைக்கும் போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து இந்திய ராணுவத்தினர் பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×