search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "BSF Jawan"

  பாக். ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முதல் மந்திரி கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh #ArvindKejriwal
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்றார்.  அரியானாவில் சோனிபேட் பகுதியில் உள்ள நரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

  மேலும், சர்ஜிகர் ஸ்டிரைக் நாளை கொண்டாட முடிவு செய்துள்ள பிரதமர் மோடி, கொல்லப்பட்ட படைவீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
  பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங்கின் மகன், அரசு தங்களது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நரேந்திர சிங்கின் மகன் மோஹித் குமார் உருக்கமாக கூறியதாவது,  எனது தந்தையின் அர்பணிப்பு பெருமைபடக்கூடிய விஷயம். யாரும் இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்வதில்லை. நம்மால் பெருமை படாமல் இருக்க முடியாது. இன்று நாம் பெருமைப்படுவோம். நாளை யாராவது கொல்லப்படுவார்கள்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நானும் எனது அண்ணும் வேலை இல்லாதவர்களாக இருக்கிறோம். என் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளார். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh

  பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். #BSFJawan #SharingInformation #PakistanSpy
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர், அச்சுதானந்த் மிஸ்ரா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை ராணுவ செய்திகள் சேகரிக்கும் நிருபர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதனால் இருவர் இடையேயும் நட்பு ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை, போலீஸ் பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக அந்த பெண்ணிடம் மிஸ்ரா பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். பின்னர் வாட்ஸ்-அப்பில் பாகிஸ்தானில் பதிவு செய்த ஒரு போன் நம்பர் மூலம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.

  மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

  இதுபற்றி மாநில தலைமை போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், “ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவர். இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.  #BSFJawan #SharingInformation #PakistanSpy
  திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரரால் கற்பழிக்கப்பட்ட பெண் பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  முசாபர்நகர்:

  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கற்பழித்ததாகவும், பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில் ‘எனது மகளை திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரர் கற்பழித்து விட்டார். அவரிடம் திருமணம் செய்ய எனது மகள் கேட்டபோது, அதற்கு அவர் எனது மகளுடன் இருந்த வீடியோ படங்களை இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.

  இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

  ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார். #PakistanArmyViolates
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்கள் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினர்.

  இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இந்த தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி எஸ் எப் வீரர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. #PakistanArmyViolates
  ×