என் மலர்

  நீங்கள் தேடியது "cm kejriwal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
  புதுடெல்லி:

  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. 

  இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

  மத்திய மந்திரி நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாக். ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முதல் மந்திரி கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh #ArvindKejriwal
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்றார்.  அரியானாவில் சோனிபேட் பகுதியில் உள்ள நரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

  மேலும், சர்ஜிகர் ஸ்டிரைக் நாளை கொண்டாட முடிவு செய்துள்ள பிரதமர் மோடி, கொல்லப்பட்ட படைவீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
  ×