search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster Relief"

    கேரளாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #IndianArmy
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

    அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.



    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு தலா 65 ராணுவ வீரர்கள் தனித்தனியக பிரிந்து 10 மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பொறியாளர் அதிரடிப்படையும் 10 குழுக்களாக சென்று மீட்பு பணிக்கு உதவியாக பணியாற்றி வருகின்றனர்.

    வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் 13 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 22 வெளிநாட்டவர்கள் உள்பட 3627 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை படகு மூலமாகவும் ராணுவம்  மீட்டு வருகிறது. இதற்காக 53 ராணுவ படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்  சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவம் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  #KeralaRains #KeralaFloods #StandWithKerala #IndianArmy
    ×