search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income"

    • கடந்த மாதம் 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது.

    22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

    கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது.

    ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

    இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா்.
    • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
    • பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.78.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய, புதிய பொருட்கள் சரக்கு ெரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றில் கட்டுமானத்துக்கான சரளை கற்கள் (0.34 லட்சம்), உணவு தயாரிப்புக்கான சோயா பீன்ஸ், விவசாயத்துக்கான உரம் (3.26 லட்சம்), வடகிழக்கு மாநிலங்களுக்கு மரக்கரி (0.55 லட்சம்), தென்மேற்கு ராஜஸ்தானுக்கு டிராக்டர்கள் (0.7 லட்சம்), சிமெண்ட் தயாரிப்புக்கான சுண்ணாம்புக்கல் (1.04 லட்சம்), ஜிப்சம் (0.08 லட்சம்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    மதுரை கோட்டத்தில் ஒட்டுமொத்தமாக 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடப்பு காலாண்டில் ரூ.78.54 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ரெயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

    கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ெரயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

    தென்னக ரெயில்வே சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூ.922 கோடி ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் 3.114 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு என பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும்.
    • பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கேத்தனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் வரவேற்புரை ஆற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் அறிவியல் நிலையம் பேராசிரியை கமல சுந்தரி கலந்துகொண்டு அறுவடைக்குப்பின் செய்யும் தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

    விளைவித்த பயிர்களை முழு தானியங்களாக விற்பதன் மூலம் கிடைக்க கூடிய லாபம் குறைவு தான். இதுவே விளைவித்த பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். உதாரணமாக நமது பகுதியில் பிரதான பயிரான நெல்லை அனைத்து விவசாயிகளும் பயிர் செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால் லாபம் கிடைத்தாலும் பயிர் செய்த பருவங்களை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதுவே நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு, இப்படி பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும். பயறு வகை பயிர்களான உளுந்து,பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    பெருநகரங்களில் முருங்கைக்கீரை போன்ற கிராமங்களில் விளையக் கூடிய பொருள்கள் கிடைப்பது அரிது. அதை நிறம் மற்றும் தரம் குறையாமல் பதப்படுத்தி விற்கலாம். இது போன்று அனைத்து பயிர்களிலும் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றலாம். விவசாயிகளாகிய நீங்களும் புதிய தொழில் முனைவோராக மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கேத்தனூர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மோகன்ராஜ் விவசாயிகளுக்கு நெல் மற்றும் இதர பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை பற்றி எடுத்து கூறினார். மேலும் ஆலங்குடி வேளாண்மை உதவி அலுவலர் சப்தகிரி வாசன் உடன் இருந்தார். பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா நன்றியுரை கூறி நிறைவு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் செய்திருந்தார்.

    • ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
    • சில திட்டங்களுக்கு மட்டும் ஆண்டு வருமான உச்சவரம்பு, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    திருப்பூர் ,

    சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற பெண், கலப்பு திருமணம், விதவை மறுமண திட்டத்துக்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. விதவை மகள் திருமண உதவி, இலவச தையல் எந்திரம் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் சில திட்டங்களுக்கானஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர், வருமான சான்று வழங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதற்காக, சில திட்டங்களுக்கு மட்டும் ஆண்டு வருமான உச்சவரம்பு, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் பொதுமக்கள் கூறுகையில், 'காப்பீட்டு திட்டம், கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. ஏழைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் சமூக நலத்திட்டங்களுக்கான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாகவே தொடர்கிறது. தமிழக அரசு அனைத்து வகை சமூகநல திட்டத்துக்கான உச்சவரம்பை 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றனர்.  

    ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 99,250-ம் மற்றும் தங்கம் 94 கிராமும், வெள்ளி 1 கிலோ 900 கிராமும் கிடைத்தது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நேற்று இந்த உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா கோவிலின் மேலாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

    இதில் ரூ. 1 கோடியே 21 லட்சத்து 99,250-ம் மற்றும் தங்கம் 94 கிராமும், வெள்ளி 1 கிலோ 900 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் பேஸ்கார்கள் கமலநாதன், ராமநாதன், அண்ணாதுரை, ஆய்வாளர்கள் முருகானந்தம், பிரபாகரன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது 2 மாத உண்டியல் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம் கிடைத்தது.
    பழனி :

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் பணியில் பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 வருவாயாக கிடைத்தது.

    மேலும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 150 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,453 கிராம், வெள்ளி 15 கிலோ (14,995 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முழுமையாக நடைபெறவில்லை. மாலையில் நேரம் ஆனதால் பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138-ம் இருந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்தது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.83 லட்சத்து, 3 ஆயிரத்து 237-ம், 2 கிலோ 930 கிராம் தங்கமும், 2 கிலோ 360 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்தமாதம் நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர்கள் விஜயராணி(மலைக்கோட்டை), ரமேஷ்(நாமக்கல்), மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் பிருந்தாநாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

    இதில், காணிக்கையாக ரூ.83 லட்சத்து, 3 ஆயிரத்து 237-ம், 2 கிலோ 930 கிராம் தங்கமும், 2 கிலோ 360 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 74-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்று 2-வது முறையாக ரூ.4 கோடியை உண்டியல் வருவாய் எட்டியுள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக திருப்பதியில் குறைந்த அளவு பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனம் செய்து வந்தனர்.

    தொற்று படிப்படியாக குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 3-ந்தேதி 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.16 கோடி வசூலானது.

    4-ந்தேதி ரூ.2.63 கோடியும், 5-ந்தேதி ரூ.2.15 கோடியும், 6-ந்தேதி ரூ.2.17 கோடியும், 7-ந்தேதி ரூ.3.19 கோடியும் உண்டியலில் வருவாயாக கிடைத்தது.

    திருப்பதியில் நேற்று 34,695 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,723 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 2-வது முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.

    நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    திருப்பதி :

    கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திருப்பதியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்தது. அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாயும் குறைந்தது.

    இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளையொட்டி பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது திருப்பதியில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் உண்டியல் வருமானமும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் முதல் உண்டியல் வருவாய் ரூ.2 கோடியை தாண்டியது.

    ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

    கடந்த 30-ந்தேதி ரூ.3.56 கோடியும், 31-ந்தேதி ரூ.2.79 கோடியும், 1-ந்தேதி ரூ.2.77 கோடியும், 2-ந்தேதி ரூ.2.83 கோடியும் வசூலானது. அதிகபட்சமாக நேற்று ரூ.4.16 கோடி உண்டியல் வசூலானது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது. நேற்று 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி 20,924 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    சரக்கு சேவை வரி மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு வருவாயாக 31 ஆயிரத்து 350.63 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. #GST #TNgovernment
    சென்னை:

    பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வெவ்வேறு வரி விகிதங்கள் இருந்து வந்தன. அதோடு, மாநில ஆட்சிக்கு நிலவும் நெருக்கடிக்கு ஏற்ப வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த மாறுபட்ட மாநில விற்பனை வரிகள், தேசிய அளவில் நடக்கும் வர்த்தகங்களுக்கு உகந்ததாக இல்லை.

    பின்னர் அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட அளவில் மதிப்பு கூட்டு வரி என்ற வாட் வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த வாட் வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான மசோதா, 2015-ம் ஆண்டு மே 6-ந் தேதி பாராளுமன்றத்தில் பெருமளவு எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

    அதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இந்தியா முழுவதிலும் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ஆலோசிப்பதற்காகவும் வரி விதிப்பில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதை செயல்படுத்துவதற்காகவும் மாநில அளவில் உறுப்பினர்களைக் கொண்ட ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டது. டெல்லியில் 30-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. குழு கூட்டம் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தக் குழு கூட்டத்தில் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து, சில பொருட்களுக்கான வரி விதிப்பை மாற்றி வருகின்றன. ஆரம்பகட்டத்தில் விதிக்கப்பட்ட வரி விகிதம் தற்போது இல்லை என்பதால், ஜி.எஸ்.டி.க்கு முதலில் இருந்த எதிர்ப்பு குறைந்துள்ளது. இந்த வரி விதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருவாயை ஈட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை, மத்திய அரசு அவ்வப்போது ஈடுகட்டி வருகிறது.



    இந்த நிதி ஆண்டின் தொடக்கமான கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் மற்றும் இழப்பீடு கிடைத்துள்ளது என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ரூ.2,864.29 கோடி, ஜூனில் ரூ.4,718.51 கோடி, ஜூலையில் ரூ.3,072 கோடி, ஆகஸ்டில் ரூ.3,593.15, செப்டம்பரில் ரூ.3,014.26, அக்டோபரில் ரூ.4,159.91, நவம்பரில் ரூ.3,116.53, டிசம்பரில் ரூ.3,650.42 என 9 மாதங்களில் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.31 ஆயிரத்து350.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், அக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாயைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டம்பரில் ரூ.308 கோடி, நவம்பரில் ரூ.77 கோடி, டிசம்பரில் ரூ.1,470 கோடி என மொத்தம் ரூ.1,855 கோடியை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது. #GST #TNgovernment

    ×