search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி கோவில் முழுவதும் நெய் தீபம் ஏற்றப்பட்டது.
    X
    திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி கோவில் முழுவதும் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

    கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் ரூ.4 கோடியை தாண்டிய உண்டியல் வருவாய்

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    திருப்பதி :

    கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திருப்பதியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்தது. அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாயும் குறைந்தது.

    இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளையொட்டி பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது திருப்பதியில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் உண்டியல் வருமானமும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் முதல் உண்டியல் வருவாய் ரூ.2 கோடியை தாண்டியது.

    ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

    கடந்த 30-ந்தேதி ரூ.3.56 கோடியும், 31-ந்தேதி ரூ.2.79 கோடியும், 1-ந்தேதி ரூ.2.77 கோடியும், 2-ந்தேதி ரூ.2.83 கோடியும் வசூலானது. அதிகபட்சமாக நேற்று ரூ.4.16 கோடி உண்டியல் வசூலானது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது. நேற்று 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி 20,924 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    Next Story
    ×