search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotels"

    • உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் என்.ஜி.ஆர். சாலை, திருச்சி சாலை, பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 67 கிலோ திண்பண்டங்கள், 5 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக் வைத்திருந்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்தக் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள் மீது சரியான தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாக்கெட்டின் மேற்புரத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு தரம் மற்றும் கலப்படம் குறித்த புகார்களுக்கு வாட்ஸ்அப் 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த வாட்ஸ்அப் எண்ணை அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    • மதுரை மாவட்டம் சோழவந்தானில் திடீர் சோதனை நடந்தது.
    • ஓட்டல்களில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், இறைச்சி விற்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் வீதி, கடை வீதி, காய்கறி சந்தை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலிதீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேேபால் இைறச்சி கடைகளில் நடந்த சோதனையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப்போன கோழிக்கறி, ஆட்டுக்கறியை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட தரமற்ற உணவு மற்றும் பாலிதீன் பைகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது மேஸ்திரி வினோத்குமார், சுந்தரராஜன், பணியாளர்கள் பூவலிங்கம், பாண்டி, முருகன் உடன் இருந்தனர்.

    • மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் சமீபத்தில் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சாப்பாட்டுக்கு ரூ.10-ம், பொங்கலுக்கு ரூ.5-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உணவின் அளவும் குறைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.

    ஒருவர் ஒருவேளை உணவுக்கு ரூ .100 செலவழித்தால்தான் பசி தீரும் எந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் சில ஓட்டல்களில் சாப்பிடும் உணவுக்கு ஜி.எஸ்.டி. வரியும் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வயிறாற உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ரூ.20 மதிப்புள்ள உணவு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் உணவுக்கு முன்பு ரூ.60 வரை செலவிட வேண்டிய நிலைமை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த நிலையில் ஓட்டல்களில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாகி உள்ளது. வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி பார்சல் செய்து வழங்குகின்றனர். இது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பல ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தரமான வைகளா?என்பது தெரியவில்லை.

    எனவே உணவு பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்வே ண்டுதலுக்காக வருகின்றனர்.

    இங்கு சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. அவற்றில் பிரியாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா ஆகியவை காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

    ஏர்வாடி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணைகளைமீண்டும் மீண்டும் பயன்படுத்துகி ன்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இது போன்ற உணவுகளி னால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட பக்தர்கள் இந்த ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

    இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
    • சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம்.

    உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    சேவை வரியை செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உணவு சாப்பிட்டதற்கான விலை ரசீதில் சேவை வரி சேர்த்து வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு விதிகளை மீறி சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும், மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    நாகை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த நாகூரில், புதுமனைத்தெரு, பீரோடும் தெரு, தர்கா அலங்கார வாசல் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சுகாதார மற்ற சூழலில் உணவு பொருட்களை விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீசுகள் வழங்கப்பட்டன. 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் மேற்படி சட்டத்திற்கு உட்பட்டு ஓட்டல் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #PlasticBan

    தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்கள் உணவகங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். #Incometaxraid

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிரபல ஓட்டல்களில் இன்று வருமானவரி சோதனை நடைபெற்றது.

    சைவ உணவுக்கு புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டல், அசைவ பிரியர்களை கவர்ந்துள்ள அஞ்சப்பர் மற்றும் கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கடைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி கட்டவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னையில் வடபழனி எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன.

    இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஓட்டல் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்தனர். #Incometaxraid 

    திருப்பதி-தனப்பள்ளி சாலையில் உள்ள ஓட்டலில் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். #Tirupati #TirupatiHotels
    திருமலை:

    திருப்பதி மாநகராட்சியில் அனுமதியில்லாமல் சிலர் ஓட்டல்கள் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கண்காணிப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணாச்சாரி, உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி சேஷாரெட்டி, பறக்கும்படை அதிகாரி ராமசாமி மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர்கள் திருப்பதி மாநகராட்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதி- தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. அகில இந்திய வானொலி நிலையம் சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல் ஒன்றில் தரமற்ற இறைச்சி வகைகளை வாங்கி வந்து பிரியாணி தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் பிரியாணியில் தரமற்ற இறைச்சி வகைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதியில் உள்ள பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட கேக் வகைகள் தரமற்றதாக இருந்தன. அதனை பரிசோதனைக்காக எடுத்து சென்று ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி லீலா மகால் சர்க்கிளில் உள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அங்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர்.   #Tirupati #TirupatiHotels
    ×