search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers raid"

    திருப்பதி-தனப்பள்ளி சாலையில் உள்ள ஓட்டலில் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். #Tirupati #TirupatiHotels
    திருமலை:

    திருப்பதி மாநகராட்சியில் அனுமதியில்லாமல் சிலர் ஓட்டல்கள் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கண்காணிப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணாச்சாரி, உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி சேஷாரெட்டி, பறக்கும்படை அதிகாரி ராமசாமி மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர்கள் திருப்பதி மாநகராட்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதி- தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. அகில இந்திய வானொலி நிலையம் சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல் ஒன்றில் தரமற்ற இறைச்சி வகைகளை வாங்கி வந்து பிரியாணி தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் பிரியாணியில் தரமற்ற இறைச்சி வகைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதியில் உள்ள பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட கேக் வகைகள் தரமற்றதாக இருந்தன. அதனை பரிசோதனைக்காக எடுத்து சென்று ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி லீலா மகால் சர்க்கிளில் உள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அங்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர்.   #Tirupati #TirupatiHotels
    ஈரோட்டில் அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதையொட்டி மாநகராட்சி கமி‌ஷனர் சீனிஅஜ்மல்கான் உத்தரவுப்படி அங்கு நகர் நல அலுவலர் சுமதி, துப்புரவு ஆய்வாளர்கள் நாச்சிமுத்து, நல்லசாமி ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இது குறித்து நகர் நல அலுவலர் சுமதி கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் விற்று வருகிறார்கள். இனி தொடர்ந்து அப்படி விற்று வந்தால் கடை உரிமத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று கூறினார்.

    முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஒரு வேனில் ஏற்றி கொண்டு சென்ற போது அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேனையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப் பான சூழ்நிலை நிலவியது.

    ×