search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "restaurants"

    • காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மதுபானம் அருந்த அனுமதி.
    • நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    குஜராத் அரசு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (GIFT City) உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

    கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைத்து நபர்களும், அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களும் நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஓட்டல், ரெஸ்டாரன்ட்கள் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுபானம் அருந்துதல், சாப்பிடுதல் வசதி கொண்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெற்ற ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்கள் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யமுடியும். இங்கு உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிஃப்ட் சிட்டி இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதிச்சேவை மையமாகவும் கருதப்படுகிறது. அதிக அளவில் ஆரக்கிள், சைரில், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் சிஃப்ட் சிட்டியில் அமைந்துள்ளது.

    • கலால்துறை எச்சரிக்கை
    • வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கலால்துறை துணை ஆணையர் மேத்யூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மது விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்களது விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபரிமாற அனு மதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடிப்படை வசதிகளை சரிவர பராமரிக்காத ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்ட ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அடிப்படை வசதி களை சரி வர பராம ரிக்காத மற்றும் சில்லறை வியா பாரத்தில் ஈடுபடும் ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டா ரண்டுகள் மீது புதுவை கலால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
    • அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.

    தாராபுரம்:

    தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் திறக்கப்பட்டது. இது குறித்து ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், அறக்கட்டளை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் ,மாநில விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் பார்த்தசாரதி, இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட புறநகர் கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க பிரிவு செயலாளர் சுகுமார், பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்தார்.
    • பாபநாசம் பகுதிகளில் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பாபநாசம்:

    சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சார்பில் சுகாதா ரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பரமசிவம், சுகாதார துறை மேற்பார்வையாளர் நாடிமுத்து, ஆகியோர் பாபநாசம் பகுதியில் உள்ள பல்வேறு அசை உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது உணவுகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள், மீன் இறைச்சிகள் உள்ளதா எனவும், தேதி முடிவுற்ற பயன்படுத்த முடியாத பொருள்கள் நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    • படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.
    • ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூ ட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு களில்சேர்ந்து படித்திடவும் , படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். சென்னை தரமணியில் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    இந்நிறுவனத்தில்12-ம் வகுப்பு முடித்த ஆதிதிரா விடர்மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்ட படிப்புபி.எஸ்.சி. , ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு (டிப்ளமோ புட் புரோடக்க்ஷன் ) 10-ம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல்,கைவிைனஞர் உணவு மற்றும் பானசே வையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய ப்படிப்பு ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்புஆகிய பட்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள். விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படி ப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தர விதிமுறைகளை பின்பற்றாத 116 உணவகங்களுக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது.
    • தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகிறது. இதில் சில உணவகங்களில் தரமற்ற, கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது, கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலை யில் உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 658 உணவகங்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 48 உணவ கங்கள் விதிமுறைகளின் படி இயங்கவில்லை என தெரியவந்தது. அந்த உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.

    மேலும் உணவகம் அல்லாத பேக்கரி, தேநீர் கடைகள், பலகாரக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. விதிகளின் படி இயங்காத 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிக ளின்படி இயங்காத அல்லது புகாரு க்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதேபோன்று உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டு புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

    • கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.
    • 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாத் ஆகியோர் உடுமலையில் கல்பனா ரோடு, பழனி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பேக்கரிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்த பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் கெட்டுப்போன சாயம் ஏற்றப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஒரு உணவகம் ,இரண்டு பேக்கரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பயோடீசல் தயார் செய்வதற்காக உரிய விலைக்கு வழங்க வேண்டும்.

    சமையல் எண்ணெயை, சில்லறை விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பில் புத்தகத்தில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அச்சிட்ட பேப்பரை உணவுகளை மடித்து கொடுக்கும்போது சூடான உணவுப் பொருளில் அதில் உள்ள கெமிக்கல் கலந்து வயிறு தொடர்புடைய பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே பிளாஸ்டிக் மூலப்பொருள் உருகி மனித உடலில் கலந்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.

    தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்கள் உணவகங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். #Incometaxraid

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிரபல ஓட்டல்களில் இன்று வருமானவரி சோதனை நடைபெற்றது.

    சைவ உணவுக்கு புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டல், அசைவ பிரியர்களை கவர்ந்துள்ள அஞ்சப்பர் மற்றும் கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கடைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி கட்டவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னையில் வடபழனி எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன.

    இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஓட்டல் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்தனர். #Incometaxraid 

    ×