search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவகங்கள்"

    • சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்தார்.
    • பாபநாசம் பகுதிகளில் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பாபநாசம்:

    சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சார்பில் சுகாதா ரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பரமசிவம், சுகாதார துறை மேற்பார்வையாளர் நாடிமுத்து, ஆகியோர் பாபநாசம் பகுதியில் உள்ள பல்வேறு அசை உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது உணவுகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள், மீன் இறைச்சிகள் உள்ளதா எனவும், தேதி முடிவுற்ற பயன்படுத்த முடியாத பொருள்கள் நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    • அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சிகளை கைப்பற்றி அழித்தனர்.
    • 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 16 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், மாவட்டத்தில் உள்ள சவா்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து அசைவ உணவகங்க ளிலும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

    இதில் அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சி சுமாா் 16 கிலோ, கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவு வணிகா்களுக்கு ரூ.1,000 வீதம், ரூ.5 ஆயிரம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஒரு உணவு வணிகருக்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் 6 கடைக்காரா்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப ட்டது.

    மேலும், 43 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றவர்களிடம் மட்டுமே கோழி இறைச்சி போன்ற மூலப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இறைச்சி மற்றும் இதர மூல பொருட்கள் வாங்கியதற்கான பில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் யாராவது இந்த விதிமுறை களை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் கடைகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும். பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சவர்மா போன்ற உணவுப் பொருட்களை வாங்கும்போது அது தரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து உணவு பொருட்களை வாங்க வேண்டும். எந்த ஒரு உணவு பொருட்கள் வாங்கும் போதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அவர் கூறினார்.

    • படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.
    • ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூ ட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு களில்சேர்ந்து படித்திடவும் , படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். சென்னை தரமணியில் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    இந்நிறுவனத்தில்12-ம் வகுப்பு முடித்த ஆதிதிரா விடர்மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்ட படிப்புபி.எஸ்.சி. , ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு (டிப்ளமோ புட் புரோடக்க்ஷன் ) 10-ம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல்,கைவிைனஞர் உணவு மற்றும் பானசே வையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய ப்படிப்பு ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்புஆகிய பட்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள். விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படி ப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தர விதிமுறைகளை பின்பற்றாத 116 உணவகங்களுக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது.
    • தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகிறது. இதில் சில உணவகங்களில் தரமற்ற, கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது, கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலை யில் உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 658 உணவகங்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 48 உணவ கங்கள் விதிமுறைகளின் படி இயங்கவில்லை என தெரியவந்தது. அந்த உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.

    மேலும் உணவகம் அல்லாத பேக்கரி, தேநீர் கடைகள், பலகாரக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. விதிகளின் படி இயங்காத 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிக ளின்படி இயங்காத அல்லது புகாரு க்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதேபோன்று உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டு புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

    • சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை எங்கும் திறக்கப்பட கூடாது.
    • விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை (புகைக்குழல் கூடம்) எங்கும் திறக்கப்பட கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகை பிடிக்கும் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை ரூ.20 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
    • சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம்.

    உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    சேவை வரியை செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உணவு சாப்பிட்டதற்கான விலை ரசீதில் சேவை வரி சேர்த்து வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு விதிகளை மீறி சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும், மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×