search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவகங்களில் சோதனை - விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கெட்டுப்போன இறைச்சி, அழுகிய மீன்கள் பறிமுதல்
    X

     கெட்டுப்போன இறைச்சி மற்றும் அழுகிய மீன்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரி பறிமுதல் செய்த காட்சி.

    உணவகங்களில் சோதனை - விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கெட்டுப்போன இறைச்சி, அழுகிய மீன்கள் பறிமுதல்

    • அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சிகளை கைப்பற்றி அழித்தனர்.
    • 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 16 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், மாவட்டத்தில் உள்ள சவா்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து அசைவ உணவகங்க ளிலும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

    இதில் அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சி சுமாா் 16 கிலோ, கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவு வணிகா்களுக்கு ரூ.1,000 வீதம், ரூ.5 ஆயிரம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஒரு உணவு வணிகருக்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் 6 கடைக்காரா்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப ட்டது.

    மேலும், 43 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 8 கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றவர்களிடம் மட்டுமே கோழி இறைச்சி போன்ற மூலப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இறைச்சி மற்றும் இதர மூல பொருட்கள் வாங்கியதற்கான பில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் யாராவது இந்த விதிமுறை களை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் கடைகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும். பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சவர்மா போன்ற உணவுப் பொருட்களை வாங்கும்போது அது தரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து உணவு பொருட்களை வாங்க வேண்டும். எந்த ஒரு உணவு பொருட்கள் வாங்கும் போதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அவர் கூறினார்.

    Next Story
    ×