search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmaster"

    ராசிபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது தொடர்பாக ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் வி.நகர்-7 பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கோகிலஸ்ரீ. இவர் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். இவர் தற்போது தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.

    தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகளை பார்த்து வர கடந்த 5-ந் தேதி சென்னைக்கு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ திறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுற்றுச்சுவர் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட், 2 பவுன் 2 மோதிரங்கள், ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் திருடிய பீரோவின் அருகில் திறந்த நிலையில் இருந்த இன்னொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை ராசிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியரின் வீடு குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இடம். ஆனாலும் திருடர்கள் சாமர்த்தியமாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று உள்ளனர். வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லை. இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை போலீசார் தெரிவித்தும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையை தாக்கி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    சென்னையில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    சென்னை:

    சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கீ.த.பச்சையப்பன்(வயது 85). இவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு சிவில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இன்று வந்தார்.

    மாடியில் உள்ள கோர்ட்டுக்கு செல்ல நடைபடியில் நடந்து சென்றார். அவருடன் அவரது மகனும் உடன் சென்றார். அப்போது திடீரென பச்சையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், அவரது மகன் தூக்கிச் சென்றார். #tamilnews
    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டு கோணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் 1077 என்ற அவசர எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரியான குழந்தைவேலுவை விசாரிக்க உத்தரவிட்டார்.

    நேற்று பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார கல்வி அதிகாரி, உமாதேவி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் 35 மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும், மாணவிகளின் பெற்றோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் பாபு (வயது51) மாணவிகள் சிலரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமியிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இது பற்றி முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் பாலியல் தொல்லையில் அவர் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று அதற்கான கடிதம் தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    தருமபுரி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளப்பட்டி, நத்தஅள்ளி, கோனப்பள்ளம், பழைய இண்டூர் உள்பட சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தயானந்த் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்.

    தயானந்த் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் செந்தில் குமார், கோபால கிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சரியாக பாடம் நடத்துவது இல்லை என்றும், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி திட்டுவதாகவும், மாணவர்களை தடியால் கடுமையாக தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாதத்திற்கு ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்துவது கிடையாது. இதனால் இன்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி முன்பு குவிந்தனர்.

    இண்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்கள் மீதான புகார்களுக்கு வருகிற திங்கட்கிழமையன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடத்தபடும் என்றும், அங்கு தங்களது புகார்களை தெரிவித்தால், புகாரின்பேரில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி வகுப்பறைக்குள் சென்றனர். #tamilnews
    வேலூரில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி வரும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ராமன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சேர்க்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை, உதவி தலைமை ஆசிரியர் மிரட்டி வருகிறார். உதவி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஆசிரியர்கள் 7 பேர் உள்ளனர்.

    இவர்கள், அனைவரும் தலைமை ஆசிரியரின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை. மாறாக எதிர் மறையான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

    எனவே, உதவி தலைமை ஆசிரியர் தலைமையிலான 7 ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
    ×