search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment case"

    • குற்றச்சாட்டின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • தாய்மாமன் மீது மோசடி உள்ளிட்ட 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு போடப்பட்ட வழக்கில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த பணம் சிறுமியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த பணத்தை சிறுமியின் தாய் மாமனான சந்தோஷ் என்பவர் சுருட்டி ஏமாற்றியுள்ளார்.

    இதுபற்றி கேட்டபோது, தனது சகோதரி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் சந்தோசை போலீசார் கைது செய்தனர். மோசடி உள்ளிட்ட 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகாலை 1 மணி அளவில் பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 1 மணி அளவில் இந்த பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தனர். தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் பஸ் நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பஸ்சை இரு சக்கர வாகனம் மூலம் 8 கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் மடக்கினர். அதில் இருந்த 11 பேர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பஸ் மற்றும் அதிலிருந்த அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பயணிகளையும் பஸ்சையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.

    இதையடுத்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார்.
    • பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்சோ உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிறார்கள் மீதான பாலியல் தொல்லை பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. அதைப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது சிறுவனை மயக்கி 55 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பற்றிய விவரம் வறுமாறு:-

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூரியகலா (வயது55). இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முதியோர் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகன் அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சமையல் செய்து அந்த பகுதியில் உணவு வழங்கி வந்துள்ளார். இவரது 15 வயதுகுட்பட்ட மகன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், மேலும் இரவு நேரங்களில் அம்மாவிற்கு உதவியாக இரவு உணவு தயார் செய்தும் அப்பகுதியில் வினியோகம் செய்து வந்தான். அவ்வாறு இரவு உணவை முதியோர் இல்லம் நடத்தி வரும் சூரியகலாவிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் தான் சூரியகலாவிற்கு விபரீத ஆசை உருவானது. அவர் பள்ளி மாணவனை தனது காதல் (காம) வலையில் வீழ்த்த நினைத்தார். அதற்காக அவர் அச்சிறுவனிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியும், ஆபாச வீடியோக்களை காட்டியும் உள்ளார். பருவவயதில் எதையும் சிந்திக்காமல், பின்விளைவுகள் பற்றியும் அறியாமல் அந்த பள்ளி மாணவன் சூரியகலாவின் வலையில் சிக்கி கொண்டான்.

    இந்நிலையில் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் தனது மகன் சிலநாட்களாக ஒரு அறையில் தனிமையில் இருப்பதும், உடல் மெலிந்து காணப்படுவதும் அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது அவன் எதையும் கூறாமல் மறைத்து உள்ளார்.

    இதனால் மகனின் விபரீத நிலைமை உணர்ந்த பெற்றோர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த பள்ளி மாணவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரித்ததில் சூரியகலா தன்னிடம் தவறாக நடந்து கொண்டாக கூறினான்.

    இதைத் தொடர்ந்து இது குறித்து சுவாமிமலை போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

    அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் இந்த வழக்கை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன்படி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்து சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

    வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார். பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    • சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா (வயது 55). இவர் அதே பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகன் (52).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் சமையல் செய்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த பெண்ணின் 15 வயது மகன் இரவு நேர உணவை முதியோர் இல்லத்திற்கு சென்று சூர்யகலாவிற்கு வழங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்நிலையில் சிறுவன் திடீரென உடல்நிலை சோர்வுற்று காணப்பட்டான். இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது சிறுவன் கூறிய பதில் அவர்களை தூக்கி வாரி போட்டது.

    முதியோர் இல்லம் நடத்தி வரும் சூர்யகலா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அதற்கு உடந்தையாக முருகன் செயல்பட்டார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனது என கூறினார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
    • சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர்.

    சூலூர்:

    சூலூரை சேர்ந்த 37 வயது பெண்மணி சம்பவத்தன்று வழக்கம்போல ஆடுகளை மேய்க்க சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார்.

    ஆள்அரவம் இல்லாத பகுதியில் பெண்மணி ஆடு மேய்ப்பதை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நைசாக பெண்ணின் அருகில் சென்றார்.

    பின்னர் அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.

    எனவே ஆத்திரம் அடைந்த வாலிபர் கல் வீசி தாக்கினார். இதில் பெண்மணிக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதற்கிடையே பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் பொதுமக்கள் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது வாலிபர் திமிராக பேசியதாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபர் சூலூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமலிங்கம் மகன் செல்லதுரை (வயது27) என்பது தெரியவந்தது.

    இவர் கோவையில் தங்கி கூலிவேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் அவர் சூலூர் தென்னந்தோப்பில் கள் குடிப்பதற்காக வந்திருந்தார். அங்கு ஆள்அரவம் இல்லாத பகுதியில் ஆடு மேய்த்த பெண்ணை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சூலூர் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென அப்பநாயக்கன்பட்டி- சூலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து அங்கு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சூலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது மணிமேகலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.

    இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த விவகாரத்தில உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

    • பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.
    • குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் திருச்சி முக்கொம்பில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

    பேரவைத் தலைவரே, கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத்தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள்.

    பின்னர், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததின் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

    இங்கே எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிற போது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.

    அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி.யை தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • சங்கர் ராஜபாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக முக்கொம்பு சுற்றுலா மையம் விளங்குகிறது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் வந்துள்ளனர்.

    அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஜீயபுரம் போலீஸ் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் (வயது 28) மற்றும் போலீசார் பிரசாந்த் (26) சங்கர் ராஜபாண்டியன் (32), சித்தார்த்தன் (30) ஆகியோர், சங்கருக்கு சொந்தமான காரில் வந்தனர். அவர்கள் கரைப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

    இதில் பிரசாந்த் நவல்பட்டு போலீஸ் நிலையத்திலும், சங்கர் ராஜபாண்டியன் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாகவும், சித்தார்த்தன் ஜீயபுரம் போக்குவரத்து போலீசிலும் பணியாற்றி வந்தனர். மேலும் சித்தார்த்தன் தற்போது விடுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி எல்லை மீறி, பொது இடத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட போலீசார், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர்.

    இதில் அந்த சிறுமியை தாங்கள் வந்த காருக்கு அழைத்துச்சென்ற போலீசார், சிறிது நேரம் காரில் வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.

    மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, 'நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த 4 பேரும் போலீசார்தான் என்று அந்த சிறுமிக்கும், அவரது காதலருக்கும் முதலில் தெரியவில்லை.

    இதையடுத்து சிறுமியும், அவரது காதலரும் அங்கிருந்து சென்று முக்கொம்பு நுழைவு பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் வந்தனர்.

    அவர்கள் போலீசார்தான் என்பதை புறக்காவல் நிலைய போலீசார், அந்த காதல் ஜோடியிடம் கூறி உறுதிப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த காதல் ஜோடி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    மேலும் இந்த தகவல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் அங்கு பொதுப்பணித்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவ நேரத்தில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வைத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் திருச்சி மாநகர போலீசார் உதவியுடன் சிறுமியை கண்டுபிடித்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீஸ்காரர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

    மேலும் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

    கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் பயிற்சி முடித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்து உள்ளார். தற்போது அவர் தனிப்படையில் பணியை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதான பிரசாந்த், சித்தார்த்தன் ஆகியோர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வச்சாணி முதலி தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். சங்கர் ராஜபாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    சிறுமி பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து முக்கொம்பில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வீட்டில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார். பின்னர் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்ட போது, முருகன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பள்ளி படிக்கும் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
    • மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஏனமக்கல் பகுதியை சேர்ந்தவர் அனில்(வயது52). இவர் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தி வந்திருக்கிறார். மேலும் தனது வீட்டில் சிறுவர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீடு வழியாக சென்ற ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பள்ளி படிக்கும் அந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

    இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற பொதுமக்கள், அனிலை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பயிற்சி என்ற பெயரில் ஏராளமான சிறுவர்களை தனது வீட்டில் சிறைபிடித்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

    மேலும் மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்ததும் தெரிந்தது. அனில் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மட்டுமே புகார் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அனில், சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன். (வயது 30). கூலித் தொழிலாளி. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் படி வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் சிறையில் அடைத்தனர்.

    ×