search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • திருப்பாதிரிப்புலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசாருக்கு கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீ சார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வாலி பர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் கே.என். பேட்டை யை சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாஜி கணேசனை கைது செய்தனர்.

    • பட்டர்புரம் விலக்கில் நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
    • கஞ்சா விற்பனை செய்த ரீகன், உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் விலக்கில் ஒரு கும்பல் லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக நாங்குநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அதில் லாரியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த ரீகன், தூத்துக்குடி ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ராஜதுரை, மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்ற லெப்ட் செல்வம், கோபி, சிவசுப்பு என்ற சிவா, தூத்துக்குடி லீவிபுரத்தை சேர்ந்த முத்து, நாங்குநேரியை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்யாணி, தென்னிமலையை சேர்ந்த இசக்கிப்பாண்டி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த பாவன்பவிகானா, ராமுடூ, மேலப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அனிதா ஆகிய 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள கஞ்சாவும், லாரியும் பறிமுதல் செய்யப் பட்டது.

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
    • 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கஞ்சா பறிமுதல்

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்று பிடித்த போது அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின்படி அப்பகுதியில் மறைந்து நின்ற இருவரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடமும் தனித் தனியாக பைகளில் தலா 1½ கிலோ கஞ்சா இருந்தது.

    3 பேர் கைது

    இதைத்தொடர்ந்து மொத்தம் 4½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பெருமாள் (வயது28), செல்வராஜ் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள கஞ்சா
    • பிரபல கஞ்சா வியாபாரி கைது


    திருச்சி


    மணிகண்டம் கள்ளிக்குடி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் யுவராஜா ஆகியோர் ரோந்து சென்று பார்த்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வருவதை பார்த்து தான் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை சாக்கு பையில் ஏதோ கட்டிவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.


    உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அந்த வெள்ளை பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை எடுத்து போலீசார் எடை போட்டு பாத்த போது சுமார் 28.500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு பிடிபட்ட மர்ம ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாளன்நகரை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 50) என்பது தெரியவந்தது.


    பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 46 கஞ்சா வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் நைனா முகமதை கைது செய்தனர்.


    பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ5,750 பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.




    • வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
    • கரன்,கனகராஜ் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை பகுதியில் இளைஞர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தென்காசி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குத்துக்கல்வலசை ராமர் கோவில் தெருவை சேர்ந்த கரன் (வயது22), அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (43) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது கைது செய்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முத்தியால் பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரிகேஷ், (வயது 22) சாரம் சக்தி நகரை சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.11,500-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.

    • புதுவை கோர்ட்டு உத்தரவு
    • போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கஞ்சா விற்ற போது ஒதியன்சாலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ஆயிரத்து 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    வழக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றமான புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

    அரசுத் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் விநாயகம் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முகேஷுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

    • 2 கிலோ கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர்
    • கோவையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது

    மேட்டுப்பாளையம்,

    அன்னூர் அருகே கீழ் கதவுக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது கீழ் கதவுக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உமேஷ்சந்திரபார்க் (வயது29) என்பதும், கோவையில் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உமேஷ்சந்திரபார்க் என்பவரை கஞ்சா விற்றதாக, அன்னூர் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஒடிசாவில் இருந்து ெரயிலில் கொண்டு வரப்பட்டு கஞ்சா விற்பனை செய்த தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட னர்.

    கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனி யில் வேலை பார்த்து வருபவர் ரமேஷ் மாலிக் (வயது 46).ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்த ரமேஷ் மாலிக் அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கொண்டு வந்து முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரதாப் (25) என்பவரிடம் கொடுத்து பல மடங்கு விலைக்கு விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.

    பிரதாப் அவரது நண்பர்கள் வில்லியனூர் காவிரி நகரை சேர்ந்த கரண் (26), தினேஷ் ஆகிய 3 பேரும் ரமேஷ் மாலிக் கொண்டு வந்து கொடுக்கும் கஞ்சாவை வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

    குறிப்பாக சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று வில்லியனூர் காவிரி நகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரமேஷ் மாலிக், பிரதாப், கரண், தினேஷ் ஆகிய 4 பேரையும் வில்லிய னூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது 5 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது அதில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. சுமார் 650 கிராம் எடை கொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 5 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து ச்சென்று நடத்திய விசாரணை யில், சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), கவுதம்(23), தங்கராஜ்(28), கோகுல்(20), காளிராஜ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததால் பரபரப்பு
    • சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில் பகுதி பொம்மையா ர்பாளையம் அருகே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது.

    இந்த ஓட்டலின் குறுகிய பாதை வழியே சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் வாலிபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி அடிக்கடி வந்து செல்வதாக ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர்.   சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அந்த இளை ஞர்கள் கஞ்சாவை எடை மெஷினில் வைத்து எடை பிரித்து கொண்டிருந்தனர். வீட்டின் அறையில் இருந்த 4 இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை எடை போடும் இயந்திரம், அவர்கள் வைத்திருந்த 6 செல்போன், அவர்களது பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி எல்லைப்பி ள்ளைசாவடி 100 அடி சாலையை சேர்ந்த தீபக் (வயது 29), ரெட்டியார்பா ளையம் தேவா நகர் ஆல்பட்ராஜ் (28), காமராஜர் சாலை நேரு நகர் வெங்க டேசன் வயது (31), புதுவை சக்தி நகர் மணிகண்டன் என்ற ராஜேஸ் (32) ஆகிய 4 பேர் என்பதும் கடந்த பல மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி அங்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    அதோடு இவர்கள் வாடகை வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி அதனை தரம் பிரித்து புதுவை, ஆரோவில், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த நெட்வொர்க்கில் உள்ள சென்னை,ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் குறித்த விவரங்க ளையும் சேகரித்து வருகின்றனர். மேலும் தோட்டத்தின் பின்பக்கம் இருந்த கஞ்சா செடிகளையும் அதை எப்படி விளைவித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×