என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் உள்ளிட்ட 4 பேர் கைது
- தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
- போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஒடிசாவில் இருந்து ெரயிலில் கொண்டு வரப்பட்டு கஞ்சா விற்பனை செய்த தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட னர்.
கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனி யில் வேலை பார்த்து வருபவர் ரமேஷ் மாலிக் (வயது 46).ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்த ரமேஷ் மாலிக் அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கொண்டு வந்து முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரதாப் (25) என்பவரிடம் கொடுத்து பல மடங்கு விலைக்கு விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.
பிரதாப் அவரது நண்பர்கள் வில்லியனூர் காவிரி நகரை சேர்ந்த கரண் (26), தினேஷ் ஆகிய 3 பேரும் ரமேஷ் மாலிக் கொண்டு வந்து கொடுக்கும் கஞ்சாவை வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று வில்லியனூர் காவிரி நகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரமேஷ் மாலிக், பிரதாப், கரண், தினேஷ் ஆகிய 4 பேரையும் வில்லிய னூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.