search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடு வாடகைக்கு எடுத்து கிலோ கணக்கில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
    X

    கோப்பு படம்.

    வீடு வாடகைக்கு எடுத்து கிலோ கணக்கில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

    • தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததால் பரபரப்பு
    • சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில் பகுதி பொம்மையா ர்பாளையம் அருகே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது.

    இந்த ஓட்டலின் குறுகிய பாதை வழியே சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் வாலிபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி அடிக்கடி வந்து செல்வதாக ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர். சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அந்த இளை ஞர்கள் கஞ்சாவை எடை மெஷினில் வைத்து எடை பிரித்து கொண்டிருந்தனர். வீட்டின் அறையில் இருந்த 4 இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை எடை போடும் இயந்திரம், அவர்கள் வைத்திருந்த 6 செல்போன், அவர்களது பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி எல்லைப்பி ள்ளைசாவடி 100 அடி சாலையை சேர்ந்த தீபக் (வயது 29), ரெட்டியார்பா ளையம் தேவா நகர் ஆல்பட்ராஜ் (28), காமராஜர் சாலை நேரு நகர் வெங்க டேசன் வயது (31), புதுவை சக்தி நகர் மணிகண்டன் என்ற ராஜேஸ் (32) ஆகிய 4 பேர் என்பதும் கடந்த பல மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி அங்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    அதோடு இவர்கள் வாடகை வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி அதனை தரம் பிரித்து புதுவை, ஆரோவில், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த நெட்வொர்க்கில் உள்ள சென்னை,ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் குறித்த விவரங்க ளையும் சேகரித்து வருகின்றனர். மேலும் தோட்டத்தின் பின்பக்கம் இருந்த கஞ்சா செடிகளையும் அதை எப்படி விளைவித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×