search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA"

    • 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி:

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.

    மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.

    • உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது.
    • தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது உள்ளது.

    உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதனால் இந்திய அணி 106 வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது உள்ளது.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. #FIFA #Belgium
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. அந்த அணி 1727 புள்ளிகளுடன் உள்ளது. 2-வது இடத்தில் உலக சாம்பியன் பிரான்சும் (1726), 3-வது இடத்தில் பிரேசிலும் (1676) உள்ளன. இந்த ஆண்டு ரஷியாவில் நடந்த 2-வது கோப்பை போட்டியில் பெல்ஜியம் சிறப்பாக விளையாடியது.

    ஆனாலும் 3-வது இடத்தையே பிடித்தது. அந்த அணி அரை இறுதியில் பிரான்சியடம் தோற்றது. குரோஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், உருகுவே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடத்தில் உள்ளன. #FIFA
    ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக ’பிபா’ தலைவர் குறிப்பிட்டுள்ளார். #FIFApresident #FIFAWorldCup
    மாஸ்கோ:

    அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.

    இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி இன்று மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.



    இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திவரும் ‘பிபா’ அமைப்பின் தலைவர் கியானி இன்பான்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது, பேசிய கியானி இன்பான்ட்டினோ, ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.  இதனை வரவேற்ற புதின் இந்த கால்பந்து போட்டிகள் நமது நாட்டுக்கு பல புதிய நண்பர்களை உருவாக்கி தந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். #FIFApresident  #WorldCupchanged  #perceptionofRussia   #GianniInfantino
    இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று பிபா தலைவர் கூறியுள்ளார். #FIFA2018 #WorldCup
    சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மாஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஷியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது.

    இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை. கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வி.ஏ.ஆர். முறை அமல்படுத்தியதன் மூலம் ஆப்-சைடு கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷியா வந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் டெலிவிஷன் மூலம் கண்டு களித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup
    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிட்டால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பைனலை பார்க்க வரலாம் என பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். #ThaiCave #FIFA
    மாஸ்கோ:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், அவர்களை முழுவதுமாக மீட்க சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 13 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படுவர் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்காக பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், 13 பேரும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த பின்னர், அவர்கள் உடல்நிலை ஒத்துழைத்தால் அவர்கள் அனைவரும் ரஷியாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரலாம் எனவும் கடிதத்தில் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

    இதேபோல, உலகின் பல முன்னணி கால்பந்து கிளப்புகளின் தலைமை நிர்வாகிகளும் தாய்லாந்து மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் குரல்களை தெரிவித்துள்ளனர். 
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றாலும் ஜப்பான் வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை தூய்மைப்படுத்தியது அனைவரையும் நெகிழ செய்தது. #Japan #YuvrajSingh

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

    முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் ரசித்த ரசிகர்களும் கதறி அழுதார்கள்.

    அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

    மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும் மைதான கேலரியை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

    ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த செய்கையை பாராட்டியுள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், “இந்த தூய்மை நடவடிக்கையை ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஒவ்வொரு வீரரும், அணியினரும் உலகில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என ட்வீட்டியுள்ளார்.
    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    உலகக்கோப்பை கால்பந்து காய்ச்சல் அனைவருக்கும் வந்துள்ள நிலையில், கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு குடும்பம் தனது வீட்டையே பிரேசில் தேசியக்கொடி நிறத்திற்கு மாற்றியுள்ளது. #WorldCup #FIFA2018
    திருவனந்தபுரம்:

    கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் தீனி போடும் உலகக்கோப்பை போட்டிகள் ரஷியாவில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியாவில் கிரிக்கெட்டிற்குத்தான் அதிக முக்கியத்தும் இருந்தாலும், கால்பந்து போட்டிக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

    வடகிழக்கு மாநிலங்கள், கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். கொல்கத்தாவில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெஸ்சியின் தீவிர ரசிகர். ரஷியா செல்ல வசதியில்லாதால், அர்ஜென்டினா அணியின் ஜெர்சி வண்ணத்தை வீடு முழுவதும் அடித்து போட்டியை வரவேற்றிருந்தார்.

    கொல்கத்தாவில் டீக்கடை வைத்திருப்பவர் ஷிப் ஷங்கர் பத்ரா. கொல்கத்தாவின் ஆயிரக்கணக்காக அர்ஜென்டினா ரசிகர்களில் இவரும் ஒருவர். இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

    இவருடைய ஆசையெல்லாம் ரஷியா சென்று அர்ஜென்டினா போட்டியை நேராக பார்க்க வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் 60 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். ஆனால் டிராவல் ஏஜென்ட் ரஷியா சென்று போட்டியை பார்க்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால் இவரது கனவு வீணானது.



    நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், சற்றென்று அவருக்கு ஒரு ஐடியா வந்தது. அதன்படி தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியில் வசிக்கும் தம்பதி தங்களது வீட்டை பிரேசில் தேசியக்கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளனர். பிரேசிலின் வீடு என்று எழுதப்பட்டு வீட்டு சுவர்களில் அந்நாட்டு தேசிய கொடி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவற்றில் பிரேசில் அணி வீரர்களின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. 



    இம்முறை பிரேசில் நிச்சயமாக கோப்பையை கைப்பற்றும் என இந்த தம்பதி உறுதிபட தெரிவித்துள்ளனர்.
    பிபா நடத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த இந்தியா விண்ணப்பம் செய்ய திட்டமிட்டுள்ளது. #FIFA
    ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் தீவிர முயற்சி எடுத்து 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்தியது. இந்த தொடர் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி மீது இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மைதானம் மீது பிபா அமைப்பிற்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் 2020-ல் நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை நடத்த விருப்பம் இருப்பதாக ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பிபாவிற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறுகையில் ‘‘2020 நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த ஏலத்தில் பங்கேற்பதற்கான அனைத்து வகை சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
    ×