search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer death"

    முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது பாமினி ஆற்று பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்ததில் இடி தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி, பார்பரம்மாள்புரம், நம்பியாறு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    நாங்குநேரி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கிராமத்தில் மழை பெய்தபோது அந்த பகுதியை சேர்ந்த முத்து என்ற விவசாயி காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை இடி தாக்கியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

    இடி தாக்கியதில் பரப்பாடி பாரதிநகரை சேர்ந்த முத்து செல்வி , செல்வகுமார் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மற்றும் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நம்பியாற்றில் 55 மில்லி மீட்டரும், ராதாபுரம் பகுதியில் 16 மில்லி மீட்டரும், சிவகிரி பகுதியில் 14 மில்லி மீட்டரும் மழை பெய்திருக்கிறது.

    கருப்பாநதி, அம்பை, அடவிநயினார் பகுதியில் தலா 10 மில்லிமீட்டரும், சங்கரன்கோவில், சேரன்மகாதேவியில் தலா 4 மில்லிமீட்டரும், சேர்வலாறு, மணிமுத்தாறு, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆனாலும் நீர்மட்டம் உயரவில்லை. பாபநாசம் அணையில் 82.30 அடியாகவும், சேர்வலாறு அணையில் 86.88 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 89.80 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 49 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    பணகுடி அரிசி ஆலையில் எந்திரத்தில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள கோலியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது70), விவசாயி. இவர் நெல் அரைப்பதற்காக பணகுடியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றார். அங்கு எந்திரத்தில் நெல்லை கொட்டும் போது பகவதி தவறி எந்திர பெல்டில் விழுந்தார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட பகவதியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே பகவதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அரிசி ஆலை நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காட்டுப்புத்தூர்:

    திருச்சி மாவட்டம் தொட் டியம்  அருகே உள்ள கூண்டு ரங்கம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). வாழை விவசாயியான இவர் வாழைத்தார் வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு கூண்டு ரங்கம்பட்டியில் இருந்து தொட்டியத்திற்கு சென்றார்.

    தொட்டியம் மாதா பள்ளி அருகே திருச்சி-நாமக்கல் சாலையில் செல்லும்போது திடீரென சாலையில் திரும்ப முயன்றார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பலத்த காயமடைந்தார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.
     
    இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி கார் டிரைவர் திருச்சி வாத்தலை கரியமாணிக்கத்தை சேர்ந்த விமல்ராஜ்  (32) என்பவரை கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி விவசாயி பலியானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 57). விவசாயி. இவர் சம்பவத்தன்று ஆரணி சேத்துபட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் காத்தரவராயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு காத்தவராயன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை அருகே மனைவி கண் முன் கார் மோதி விவசாயி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் கருவாடன்செட்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன். (வயது 40). விவசாயி. அவரது மனைவி காளீஸ்வரி. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    நாடுகண்டனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. இந்த கார் சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குசெல்வதற்காக 8 பேர் காரில் வந்தனர். இந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மனைவி கண் முன் உடல் நசுங்கி பலியானார்.

    அதோடு காரில் வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நொய்யல் அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானர். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்: 

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 83), விவசாயி. இவர் நேற்று முன்தினம்  பாலத்துறை அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு இரவு தனது சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவரின் பின்னால் வந்த அரசுப்பேருந்து சைக்கிள் மீது மோதியது.

    இதில் பெரியசாமியின் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து பெரியசாமி மகன் செந்தில் நாதன் (40) வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரசுப்பேருந்து ஓட்டுனர் சேலம் மாவட்டம் கண்டக் காப்பட்டியை சேர்ந்த நல்ல தம்பி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் இறந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த யானை தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போடூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது50). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கி தூக்கி வீசியது. 

    இதில் படுகாயமடைந்த செல்லப்பா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்லப்பா இறந்தார். 

    இறந்து போன செல்லப்பாவுக்கு திட்டம்மா என்ற மனைவியும், அலமேலு என்ற மகளும் உள்ளனர்.
    பட்டுக்கோட்டை அருகே புயலால் விழுந்து கிடந்த மின்கம்பி அறுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.

    இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    ஆத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்காம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 45).விவசாயி.

    இவர் தனது நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வது வழக்கம்.

    அங்கு மான், காட்டுப்பன்றி, மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் கல்வராயன் மலை, கரியகோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மோடூர் மலைக்கிராமத்திற்கு வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்கள் புதர் மறைவில் இருந்து வனவிலங்குகளை கண்காணித்தனர்.

    அப்போது செல்வராஜ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். உடனே செல்வராஜியின் நண்பர்கள் 3 பேரும் அவரது உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு பிணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரெண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேட்டைக்கு சென்ற செல்வராஜ் எப்படி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. புதர் மறைவில் இருந்து வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது அவருடன் சென்ற நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

    செல்வராஜியின் உடலை அவரது வீட்டு முன்பு போட்டு சென்ற நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகிய 3 பேரும் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தலை மறைவாகி விட்டனர்.

    இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.நண்பர்கள் சிக்கினால் தான் செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    மர்மமாக இறந்த செல்வராஜிக்கு சரோஜா என்ற மனைவியும், ராமமூர்த்தி (9), சத்யமூர்த்தி (8), ஜெயவேல் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் செல்வராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இச்சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.

    இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

    இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm

    திருமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, விவசாயி. இவர் இன்று காலை அருகில் உள்ள அச்சம்பட்டி காலனிக்கு சென்றார்.

    அங்கு ரோட்டோரத்தில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் அங்குள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினிலாரி சுப்பையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×