search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer death"

    • சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.
    • விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 67). விவசாயி. இவர் சம்பவத்தன்று சேத்தியாத்தோப்பில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆணைவாரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மை மோசமானது. எனவே ஜெயராமன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.
    • கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 60). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக அந்தூரில் இருந்து குன்னம் நோக்கி நடந்து சென்றார்.

    அப்போது குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசனின் மனைவி உஷா(26) என்பவர் குன்னம் தாலுகா அலுவலகம் செல்வதற்காக மொபட்டில் வந்தார். முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராவிதமாக மொபட் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் அண்ணாதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அதேபோல் உஷாவும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் அண்ணாதுரையை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி சின்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிகுப்பம் கிராமம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). விவசாயி. கடந்த 24-ந்தேதியன்று சந்திரசேகர் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக வைக்கோல் எடுக்க சென்றார். வைக்கோல் போரில் கை வைத்து எடுக்கும்போது அதன் உள்ளே இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    சாத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள வன்னிமடையை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 69). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வந்து விட்டது. ஆனால் கன்றுக்குட்டி மற்றும் வேலுசாமி வீட்டிற்கு வரவில்லை.

    உடனே வேலுசாமியின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வன்னிமடையில் இருந்து நென்மேனி செல்லும் சாலை ஓரத்தில் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் கன்றுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது.

    இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    செங்கம் அருகே ஓடையை கடக்க முயன்ற விவசாயி நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கத்தை அடுத்த செ.சொர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 60), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்குச் செல்வதற்காக நேற்று கிராமம் அருகில் உள்ள ஒரு ஓடையை கடந்து செல்ல முயன்றார்.

    மழையால் ஓடையில் அதிகளவில் தண்ணீர் ஓடியதால் தர்மலிங்கம் கடந்து செல்ல முடியாமல் எதிர்பாராதவிதமாக ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, தர்மலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே சாலையில் நடந்த சென்ற விவசாயி மீது மினிலாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காட்டேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது55). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் காட்டேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. 

    தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக கண்ணாயிரம் அரூர்-ஊத்தங்கரை செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கண்ணாயிரம் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்ட  கண்ணாயிரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங் கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கண்ணாயிரம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    சூளகிரி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவரும் இவரது நண்பர்களுமான முனிராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்திற்கு சென்றுவிட்டு தங்களது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

    சின்னகொத்தூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வேப்பனப் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி அருகே விபத்தில் விவசாயி பலியானர். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான வேனை அடித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள சிறுமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 55) விவசாயி.

    இவர் இன்று காலை தனது சைக்கிளில் அருகே உள்ள மேலவாசலுக்கு சென்றார். அங்கு மார்க்கெட்டில் மீன் வாங்கி விட்டு வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். சிறுமங்கலம் அருகே தஞ்சை-மன்னார்குடி சாலையில் வந்தபோது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான வேனை அடித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த வடுவூர் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நம்பியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது62). விவசாயி. இவர் நேற்று சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் இரும்பறை ரோட்டில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் வந்தபோது அந்த வழியே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனபள்ளி அருகே உள்ள மேல்அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரது மகன் முருகேசன் (44).

    விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்னை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி முருகேசன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் முருகேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி எறங்காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (வயது55). விவசாயியான இவருக்கு திருமணமாகி காவேரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாதையன் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் கிருஷ்ணகிரி சாலையில் செல்லும்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதையன் பலத்த காயம் அடைந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம் அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள சென்னாம்பள்ளியை பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது60). விவசாயி. இவர் நேற்று மாலை குடியாத்தம் காட்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் முனிரத்தினம் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×