search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Factional conflict"

    வடமதுரை அருகே கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 31). ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (29) என்பவர் அங்கு வந்து தகராறு செய்தார்.

    மேலும் ஆட்டோவை அடித்து நொறுக்கி முத்துவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த முத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் லோகநாதனை சொத்து தகராறு காரணமாக செந்தில்குமார், முத்து, ஜெயராம் ஆகியோர் தாக்கி கத்தியால் குத்தி மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து லோகநாதனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்து மற்றும் லோகநாதன் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 47), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கலியபெருமாள் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு உறவினர்களான பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அரிகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான மருதாசலம், வெள்ளக்குட்டி, கலைச் செல்வி, ராஜாமணி ஆகியோருடன் அங்கு வந்தார்.

    அரிகிருஷ்ணன் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கலியபெருமாளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருதரப்பை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கலியபெருமாள், பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி, கட்டையால் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் கலியபெருமாள் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குபதிவு செய்த அரிகிருஷ்ணன், மருதாசலம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள கலைச்செல்வி, ராஜாமணி மற்றும் வெள்ளக்குட்டியை தேடி வருகிறார்.

    துறையூர் பெரிய ஏரிக்கரையில் செச்சை முனி ஆண்டவர் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் செச்சை முனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நல்ல மழைபெய்யவும், மக்கள் நலமுடன் வாழவும்  ஊச்சாத்துரை திருவிழா  நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஊச்சாத்துரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு மூங்கில் தெப்பகுளத்தில் இருந்து புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    பின்னர் செச்சைமுனி ஆண்டவருக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைநடைபெற்றது. மாலை செச்சை  மூனீஸ்வரர் சிரசு திருவீதிஉலா தொடங்கி  மூங்கில் தெப்பகுளம் வழியாக பாலக்கரை சின்னகடை வீதி பெரியகடை வீதி வந்தது. பக்தர்கள் சிரசு எடுத்து வரும்போது இருதரப்புக்கு இடையே திடீரென தகறாறு ஏற்பட்டது. 

    இதில் இருதரப்பினரும், கற்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த லோகநாதன் (24) திவாகர் (19 )பரத்(30) பாபு(32), தமிழ்(18), சிவா(18) ஆகிய 6 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் காயமடைந்தனர்.

    இது குறித்து துறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன்(50) செல்வராஜ்(42)  ராமசாமி(60) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். 
    திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பரிமளா (வயது 26) ஆகியோருக்குமிடையே நிலம் பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் தனது ஆதரவாளர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டனர்.

    ரமேஷ், மணிகண்டன், பரிமளா, மல்லிகா மற்றும் அன்னக்கிளி ஆகியோர் ஒரு பிரிவாகவும், சுரேஷ், கங்காதேவி, திருமலை, பன்னீர்செல்வம் மற்றும் அய்யனார் ஒரு பிரிவாகவும் சேர்ந்து சண்டைபோட்டுக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலபந்தல் போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும், பரிமாளா உள்ளிட்ட 5 பேர் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த அரசகுடியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள குடிநீர் குழாயை உடைத்துவிட்டதாக அதே ஊரைசேர்ந்த தமிழ்செல்வன், கருப்புசாமி, மற்றும் பலர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பால் ராஜ் தரப்பினரும், தமிழ்ச் செல்வன் தரப்பினரும் இதுதொடர்பாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கருப்புசாமிக்கும், மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது சம்மந்தமாக பால்ராஜ் மருமகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் தமிழ்ச்செல்வன் சுந்தர பாண்டியன், கரிகாலன், முத்தமிழ் செல்வன், கருப்புசாமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், கருப்புசாமி(57) கொடுத்த புகாரின்பேரில் ஆவிக்கரையை சேர்ந்த மணிகண்டன், அரசகுடியை சேர்ந்த அஜித்குமார் பால்ராஜ், தேவேந்திரன், சவுந்தர்ராஜன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நேற்று ஒரு தரப்பினர் வண்டி வேசம் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

    இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருவிழாவில் பங்கேற்ற ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. அவ்வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டதால் குள்ளபுரம், ஏ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நகருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தண்ணீர் பந்தலுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் நேற்று சுவாமியின் முத்துப் பல்லக்கு ஊர்வலம் சிறிது நேரத்தில் முடிந்தது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்புக்கு பெரும்பாலான போலீசார் சென்று விட்டதால் குறைந்த அளவு போலீசாரே உள்ளனர். எனவே இன்று மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குடவாசல் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஏருந்தவாடியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் அப் பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் கம்பசேவை திருவிழாவில் கலந்து கொண்ட போது நாடக கலைஞர்கள் மீது கல்வீசி தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், செங்குட்டுவன், பச்சைமுத்து, குனசேகரன், முரளி ஆகியோர் குற்றம் சாட்டினர். 

    இதனை ஏற்று கொள்ளாமல் அரவிந்தும், அவர் உறவினர்கள் தனபால், கணேசன், வினோத் ஆகியோர் மறுத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் உள்ளிட்ட 4 பேரும் உருட்டு கட்டையால் அரவிந்த் மற்றும் அவரது உறவினர்களை தாக்கியுள்ளனர்.

    இதுபற்றி குடவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர ராஜா 5 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    ×