என் மலர்
செய்திகள்

வடமதுரை அருகே கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்தி குத்து
வடமதுரை அருகே கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 31). ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (29) என்பவர் அங்கு வந்து தகராறு செய்தார்.
மேலும் ஆட்டோவை அடித்து நொறுக்கி முத்துவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த முத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் லோகநாதனை சொத்து தகராறு காரணமாக செந்தில்குமார், முத்து, ஜெயராம் ஆகியோர் தாக்கி கத்தியால் குத்தி மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து லோகநாதனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்து மற்றும் லோகநாதன் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






