search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extension"

    • விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ெரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ெரயிலின் சேவை வேளாங்கண்ணி வரை, நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி எர்ணா குளத்தில் இருந்து அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சேரும்.

    மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

    இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ராமேசுவரம் - செகந்திராபாத் ரெயில் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    மதுரை

    ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதன் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 2, 9, 16 ஆகிய நாட்களில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    • அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
    • விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாபகுதிகளில் 01.01.2011 -ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப் படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனுமதியற்ற கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
    • ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும் திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டன.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேல் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாதம் காலநீடிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    சீக்கிய கலவர வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. #SajjanKumar #DelhiHighCourt #Surrender #AntiSikhRiotsCase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.

    இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

    ஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும், தனது குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடிப்பதற்கும் அவகாசம் தேவைப்படுவதாக அந்த மனுவில் சஜ்ஜன் குமார் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் டெல்லியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் நேற்று சஜ்ஜன் குமார் ஆஜரானார். அந்த வழக்கு அடுத்த மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SajjanKumar #DelhiHighCourt #Surrender #AntiSikhRiotsCase
    சபரிமலை உள்பட 4 இடங்களில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    பத்தனம்திட்டை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல இந்து அமைப்புகள், பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த அக்டோபர் 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு வந்த இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நூகு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு 6 நாட்கள் நீடித்தது. இதனிடையே மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் தற்போதும் பதற்றம் நிலவி வருவதால் 22- ந்தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து கலெக்டர் நூகு உத்தரவிட்டார்.

    இந்த தடை உத்தரவு 22-ந் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் 4 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    தினகரன் சகோதரி சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
    புதுடெல்லி:

    சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதிசெய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். 
    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது.
    எலச்சிபாளையம்:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை, திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்தது.

    இதில் குமாரசாமியின் வீடு மற்றும் ஆடிட்டரின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சோதனை மற்றும் விசாரணையை முடித்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது. மேலும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்றது.

    இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வந்த வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே இதுகுறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் படும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையில் அந்த தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் சத்துணவு முட்டை முறைகேடு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

    திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் நேற்று 16-வது நாளாக நீடித்ததால் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்தன.
    நாமக்கல்:

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 252 கிளை தபால் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. எனவே கிராமபுறங்களில் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய, கோட்ட செயலாளர் செந்தில் கூறியதாவது :-

    நாமக்கல் மாவட்டத்தில் 16 நாட்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 570 பேர் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    குரங்கணி மலைப்பகுதியில், மலையேற்ற பயிற்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடுத்தடுத்து உயிர் இழப்புகள் அதிகரித்தன. மொத்தம் 23 பேர் இறந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மலையேற்ற பயிற்சிக்கு, மே 31-ந்தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அனுமதியற்ற பாதையில் மலையேற்றம் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில் காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்கள் அனுமதி அளிக்கப்படாத மலையேற்ற பாதையில் சென்று இருந்ததால், குரங்கணியில் இருந்து கொழுக்குமலை செல்லும் மலைப்பாதையில் யாரும் மலையேற்றம் செல்லாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், அங்கீகரிக்கப்பட்ட மலையேற்றப் பாதையான குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரையிலான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடி அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அனுமதி கிடைக்குமா? என்ற ஆசையில் கோடை கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு சோதனை சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.

    இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தற்காலிக தடை காலமான மே 31-ந்தேதி முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக மலையேற்ற பயிற்சிக்காக குரங்கணிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தடையை விலக்கி மீண்டும் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியிலேயே வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை மலையேற்றம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தடையை விலக்கிக் கொள்வது தொடர்பாக அரசு உத்தரவு எதுவும் இன்னும் வரவில்லை. இதுதொடர்பாக தேனி மாவட்ட வனத்துறைக்கு முறையான உத்தரவு இன்னும் அளிக்கப்படவில்லை. அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் தடை நீடிக்கும்’ என்றார். 
    ×