search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கணி"

    • ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள்.
    • ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழாவை முன்னிட்டு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நடைபெற்ற ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் சிவலோகநாயகி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக பணியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • முக்கிய திருவிழா நாளான ஆனிகொடை விழாவில் விநாயகர், அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களதுநேர்த்திக் கடன் செலுத்தியும், மாவிளக்கில் தீபம் ஏற்றி நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

    கொடைவிழா

    நேற்று முன் தினம் காலையில் இருந்து அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு பூஜைக்கு பின்பு நாராயண சுவாமி சிறிய சப்பரத்தில் எழுந்தளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனிகொடை விழாவில் விநாயகர், அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நேர்த்திக்கடன்

    பக்தர்கள் தங்களது உடல் குறைபாடுகள் நீங்க அங்க பாகங்களை மரக் கட்டையில் செய்து நேர்த்திக் கடன் செலுத்தியும், மாவிளக்கில் தீபம் ஏற்றி நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

    சிறப்பு பூஜை

    இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் அதன் பின் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஜெகதீசன், செல்வராஜ், முத்துமாலை, ராஜேந்திரன், சப்தசாகரன், குணசேகரன், சந்திர சேகரன், கல்யாணசுந்தரம், தங்கராஜ், ராகவன், ஜெயராஜ், ரவி, பெரியசாமி, கேசவமூர்த்தி, ஜெயசங்கர், ஜெகநாதன், ஈஸ்வரன், ராமஜெயம், ஜெயப்பிரகாஷ், கண்ணன், பாலகிருஷ்ணன், முத்துக்குமார், முத்துராஜா, ேகாவில் கிளார்க் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கார், வேன்களில் ஏராளமானோர் வந்திருந்து ஆனி கொடைவிழாவில் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் மேற்பார்வையில் மருத்துவ ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு ஏற்பாடு களை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்க டேசன் மேற்பார்வையில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    ×