search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explosion"

    • மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேக்கிங் செய்யும் போது வெடிவிபத்தான ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வெடிவிபத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதற்கட்டமாக இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
    • கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

    பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது.
    • வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற போலீசார் அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து போலீசார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் வெடித்ததில் 2 பேர் பலியாகினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.

    இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் கார் ஒன்று வந்தது. அந்தக் கார் திடீரென வெடித்ததில் 2 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் எப்.பி.ஐ. விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
    • வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான மூத்த தீயணைப்பு அலுவலர் நரசிம்மன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரை மட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

    வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் டி. எஸ்.பி மகாலெட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கைப்பற்றபட்ட வெடி பொருட்கள் குறித்தான வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

    வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெடிவிபத்து நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. 

    • வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தினருக்கு காங். தொழிலாளர் யூனியன் ஆறுதல் கூறினார்.
    • வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த கிச்ச னாயக்கம்பட்டி அருகிலும், ஸ்ரீவில்லிபுத் தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையத்திலும் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 12 பெண்கள் உள்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குறிப்பாக லட்சுமியாபு ரம், அழகாபுரி, காந்திநகர், மூவறைவென்றான் பகுதி களை சேர்ந்தவர்கள் பலி யாகினர். இந்த தொழிலா ளர்களின் குடும்ப உறுப்பி னர்களை ராஜபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் விருது நகர் மாவட்ட தலைவ ரும், பட்டாசு மற்றும் தீப் பெட்டி நலவாரிய உறுப்பி னருமான தளவாய் பாண்டி யன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பாதிக்கப்பட்டவர்க ளுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டி அழகாபு ரியில் முகாமிட்டிருந்த சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வத்திராயி ருப்பு வட்டாட்சியர் முத்து மாரி ஆகியோரை நேரில் சந்தித்து உயிரிழந்த தொழி லாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,

    பெற்றோர்களை இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

    அப்போது வத்திராயி ருப்பு முன்னாள் வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் பாண்டிசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது.
    • தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே பட் டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்ப தும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும்.

    பட்டாசு தொழிற் சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

    தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    • குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது.
    • குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தாஷ்கண்ட்:

    உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

    • 13 பேர் சம்பவ இடத்திலும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர்.
    • 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    மேலும், 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பிறகு, நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்மீனியாவிற்கு இப்பகுதியை விட்டு வெளியேறினர்.

    அப்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் தீ பிடித்தது. இதில் ராஜா மற்றும் கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 2 பேர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆலையை நடத்தி வந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×