search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exhibition"

    • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
    • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

    தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்
    • கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது

    திருச்சி 

    1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த கண்காட்சி 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கண்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்து மலரை வெளியிட்டார். கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஸ்ரீமதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நவீன் குமார்,

    திருச்சி கிரடாய் அமைப்பு சேர்மன் கோபிநாதன், அவங்கதலைவர் ரவி, பேர்ப்ரோ கமிட்டி தலைவர் மோகன் சீனிவாசன்.

    அகில இந்திய கிரடாய் துணைத்தலைவர் (தெற்கு) ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரடாய் தலைவர் இளங்கோ, செயலாளர் ஆனந்த்,

    கிரடாய் செயலாளர் மனோகரன், பொருளாளர் முகமதுஇப்ராகிம், ஃபேர் ப்ரோ செயலாளர் நசுருதீன், ஆலோசகர் ஷாஜகான்

    உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெறுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட படைப்புகளை 24 கட்டுமான நிறுவனத்தினர்களும், 6 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள்அலங்காரம், எலக்ட்ரிகல் போன்ற 8 நிறுவனங்களுடன் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகிறது. இங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

    • புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • திருச்சியில் இன்று வேளாண் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தகுதியான பெண்கள் ஒருவரும் விடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இன்று வேளாண் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தஞ்சையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகளின் திறப்பு விழா மற்றும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரில் தஞ்சைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள மனையே றிப்பட்டி கிராமத்தில் திடீரென இறங்கி அங்கு நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாமுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    முகாம் எவ்வாறு நடைபெறுகிறது, இன்றைய தினம் எத்தனை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற பல்வேறு விவரங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.

    தகுதியான பெண்கள் ஒருவரும் விடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புத்தக கண்காட்சி நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.
    • பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று அரண்மனை வளாகத்தில் தொடங்கியது.

    வருகிற 24 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.

    இன்று புத்தக திருவிழாவை கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

    புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்ப ட்டுள்ளது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    முதல் முறையாக மாவட்ட காவல்துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டி அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    இதில் ஏராளமான சிறை கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    மாணவர்களை ஊக்குவி ப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    முன்னதாக அமைச்சர் அன்பில்ம கேஸ்பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புத்தக கண்காட்சி, இலக்கிய விழாக்கள் நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும்.

    மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு , டெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர்.

    விரைவில் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம், அரசு துறைசார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். பரிசீலித்து எதை உடனடியாக செய்ய வேண்டுமோ அதை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர அஞ்சுகம பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டன்.

    • ராமநாதபுரத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தலைமையில் நடந்தது.

    மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப்0 பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பா ளரும் தொல்லியல் ஆய்வாளரு மான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார். தேர்த்தங்கால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை பார்வை யிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் அனைத்துப் பள்ளி களிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல் படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடி மங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசி ரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

    • தத்ரூபமாக வரைந்திருந்த மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் கண்காட்சி.
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பிடித்தமான ஓவியங்களை வாங்கி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு நுண் கலைக்குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் படைப்பாளர் திருநாவுக்கரசு தத்ரூபமாக வரைந்திருந்த மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் பற்றிய ஓவியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்ப ட்டிருந்தது.

    இந்த ஓவிய கண்காட்சியை தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனைவர் அய்யாறு புகழேந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.

    இந்த ஓவிய கண்காட்சியை ஏராள மான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் . அவர்களுக்கு பிடித்தமான ஓவியங்களை வாங்கி சென்றனர்.

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
    • மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    கல்லாகுளம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர திருநாளை யொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோவில் பணியாளர் களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கியதன் புகைப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

    இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

    • இப்பொருட்காட்சியில் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    கோவை,

    கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த மே 13-ந் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது.

    ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

    இப்பொருட்காட்சியில் 27 அரசு துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரசு பொருட்காட்சியை காண வந்த பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    நேற்று வரை நடந்த அரசு பொருட்காட்சியை 1 லட்சத்து 77 ஆயிரத்து 742 பெரியவர்களும், 40 ஆயிரத்து 303 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 45 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் நுைழவுக்கட்டணமாக ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார்.
    • சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

    நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் டாக்டர் தேவ்ஜில், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், அவனியாபுரம் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.

    இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

    பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை-யோகா மருத்துவ கண்காட்சி நடைபெற்றது
    • கலெக்டர் பிரதீப் குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்

    திருச்சி,

    திருச்சியில் 9-வது சர்வதேச யோகா தின விழா யோகா உத்சவ்-2023 (யோகா பெருவிழா) என்ற பெயரில் வெகு விமரிசையாக காலை முதல் மாலை வரை நடைபெற்றது.முதலாவதாக ஆயுதப்படை காவலர் மைதானத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா யோகா விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் சேர்ந்து அவர் யோகா பயிற்சி செய்தார். இரண்டாவது நிகழ்வாக மெதடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இறுதியாக திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் கலெக்டர் மா.பிரதீப் குமார் சர்வதேச யோகா தின விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் சிறப்பாக செய்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்களை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினார்.

    ×