search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இன்று  கிரடாய் வீடுகள் கண்காட்சி தொடக்கம்
    X

    திருச்சியில் இன்று கிரடாய் வீடுகள் கண்காட்சி தொடக்கம்

    • மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்
    • கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது

    திருச்சி

    1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த கண்காட்சி 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கண்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்து மலரை வெளியிட்டார். கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஸ்ரீமதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நவீன் குமார்,

    திருச்சி கிரடாய் அமைப்பு சேர்மன் கோபிநாதன், அவங்கதலைவர் ரவி, பேர்ப்ரோ கமிட்டி தலைவர் மோகன் சீனிவாசன்.

    அகில இந்திய கிரடாய் துணைத்தலைவர் (தெற்கு) ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரடாய் தலைவர் இளங்கோ, செயலாளர் ஆனந்த்,

    கிரடாய் செயலாளர் மனோகரன், பொருளாளர் முகமதுஇப்ராகிம், ஃபேர் ப்ரோ செயலாளர் நசுருதீன், ஆலோசகர் ஷாஜகான்

    உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெறுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட படைப்புகளை 24 கட்டுமான நிறுவனத்தினர்களும், 6 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள்அலங்காரம், எலக்ட்ரிகல் போன்ற 8 நிறுவனங்களுடன் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகிறது. இங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

    Next Story
    ×