search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், புத்தக திருவிழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    புத்தக திருவிழாவை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சையில், புத்தக திருவிழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • புத்தக கண்காட்சி நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.
    • பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று அரண்மனை வளாகத்தில் தொடங்கியது.

    வருகிற 24 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.

    இன்று புத்தக திருவிழாவை கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

    புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்ப ட்டுள்ளது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    முதல் முறையாக மாவட்ட காவல்துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டி அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    இதில் ஏராளமான சிறை கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    மாணவர்களை ஊக்குவி ப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    முன்னதாக அமைச்சர் அன்பில்ம கேஸ்பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புத்தக கண்காட்சி, இலக்கிய விழாக்கள் நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும்.

    மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு , டெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர்.

    விரைவில் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம், அரசு துறைசார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். பரிசீலித்து எதை உடனடியாக செய்ய வேண்டுமோ அதை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர அஞ்சுகம பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டன்.

    Next Story
    ×