பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சி

திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார்.சசிகுமார் முன்னிலை வகித்தார்.
திருப்பரங்குன்றத்தில் நடந்த பா.ஜ.க. சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி பார்வையிட்டார்.
திருப்பரங்குன்றத்தில் நடந்த பா.ஜ.க. சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி பார்வையிட்டார்.
Published on

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் டாக்டர் தேவ்ஜில், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், அவனியாபுரம் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com