search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS"

    • குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது.

    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும், மாண்பையும், அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

    இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத்துறையும், காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    மேலும், குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டு வீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது.

    மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது.

    இது தான் விடியா திமுக மாடல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    • பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
    • புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.

    • பிரதமர் மோடியை தனியாக சந்திக்க இ.பி.எஸ். நேரம் கேட்டுள்ளார்.
    • ஓ.பி.எஸ்ஸும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.

    சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின்போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

    அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.
    • ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என ஈபிஎஸ் வழக்கறிஞர் வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் இன்று மாலையில் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
    • ஓபிஎஸ் தரப்பு மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும்

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது: முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், அவர்கள் மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

    திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறை கூற முடியாது. கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.

    இவ்வாறு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    • வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.
    • மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கோரி, சிறுபான்மையினர் அமைப்பினருடனான கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:-

    கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை கேட்பார்கள் என்பது இல்லை, எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.

    தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த மதத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது அதிமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வாரா? என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரான செந்தில்முருகனை வாபஸ் பெற வைத்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளோம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான செம்மலை கூறுகையில், ஓ.பி.எஸ் பிரசாரத்துக்கு வருவது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்யணும் என்று கூறி இருக்கிறார்.

    இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு இரட்டை இலைக்கு பிரசாரம் செய்ய வருவதா? என்ற வகையில் பேசி இருக்கிறார்.

    எங்களை பொறுத்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும். வெற்றி கிடைக்கும். எனவே அதை மனதில் வைத்து தான் நாங்கள் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கூறினோம்.

    எங்களை வேண்டா வெறுப்பாக நடத்தினால் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்தால் அவர்களுக்கு தான் இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இரட்டை இலை சின்னம் கோரி, ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு இன்று விசாரணை.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஈபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்.

    இரட்டை இலை சின்னம் கோரி, ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அதிமுக தரப்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளது
    • அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன

    சென்னை:

    அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன், அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததாகல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். வி.பி.துரைசாமி போன்ற கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை.

    பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்தாகும். அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கூறினர்.

    இதையும் படியுங்கள்.. கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
    விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.

    பின்னர், சுமார் 8 மணியளவில் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள பிரதமர் மோடியுடன் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினர். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.

    அப்போது, நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நுல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.

    மேலும், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை என்றும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தொடங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதையும் படியுங்கள்.. சென்னையில் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
    ×