என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இரட்டை இலை சின்னம் கோரி, ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு இன்று விசாரணை.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்.
இரட்டை இலை சின்னம் கோரி, ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அதிமுக தரப்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






