என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • நாங்கள் என்ன நோக்கத்துடன் படத்தை எடுத்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது
    • . விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன்.

    டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 'பராசக்தி' படக்குழு கலந்துகொண்டது. இதனைத்தொடர்ந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

    "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரிடமும் நேர்மறை எண்ணங்கள் பரவட்டும். பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் படத்தை சரியான வழியில் புரிந்துகொண்டுள்ளனர். நாங்கள் என்ன நோக்கத்துடன் படத்தை எடுத்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது. அவர்கள் படத்தை முழுமையாகப் பார்த்தால் புரிந்துகொள்வார்கள்.

    எனக்கு எந்த பிரச்சார நோக்கமும் இல்லை. அதில் விருப்பமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய ஜனநாயகன் விரைவில் வெளியாகும்" என தெரிவித்தார்.


    • அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு
    • ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல

    விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் திட்டமிட்டப்படி வெளியாகாத நிலையில், அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

    பராசக்தி படம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, படத்தைப் பற்றித் தவறான கருத்துகளைப் பரப்புவதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் மிக மோசமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளப்பக்கம் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு பேசிய அவர், அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும்.

    "Blasting Tamil Cinema" என்ற எக்ஸ் பக்கத்தில் நான் பார்த்த ஒரு விஷயத்தை வாசிக்கிறேன். "தணிக்கை குழுவிடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயம் இல்லை.. அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, அவர்கள் மன்னித்துவிட்டால் #பராசக்தி திரைப்படம் ஓடும்." எனக் குறிப்பிட்டுள்ளனர் என அந்தப் பதிவை வாசித்தார். 

    மேலும் தனது படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகச் சிலர் செய்யும் இத்தகைய செயல்களை "ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரம்" என்றும் சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல என்றும், ஆரோக்கியமான போட்டியை ரசிகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • D54 படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
    • 'D54' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தத்த்து.

    நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    'D54' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தத்த்து. இந்நிலையில், 'D54' படத்தின் முக்கிய அப்டேட் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை காலை 10.50 மணிக்கு வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • மத்திய இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.
    • விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.

    மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் 'பீ குட்' என்ற வாசகம் அடங்கிய பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.

    வெனிசுலா மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக 'நோ கிங்ஸ்' என்ற இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய மார்க் ருப்பலோ, டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது என காட்டமாக விமர்சித்தார்.

    • அண்ணன் - தம்பி பொங்கல் கனவு பலிக்கவில்லை
    • 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 அன்றே வெளியாக இருந்தநிலையில், தணிக்கை பிரச்சனையால் தற்போதுவரை வெளியாகவில்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி விசாரணை தொடர்வதால் தற்போது வரை மாற்று ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. 

    மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் சொன்னவாறே ஜன.10 திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், "தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம். இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

    ஜன. 9-ல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன.10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல் -அண்ணன் தம்பி பொங்கல்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ஜன நாயகன் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசியுள்ளார். "ஜன நாயகன் வெளிவராதது மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் நாமும் சப்போர்ட்டாக இருந்து உதவி செய்திருக்கவேண்டும். மேடையில் அழுதுவிட்டு, எனக்கு அண்ணன்மாதிரி, தம்பிமாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்சென்று நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்." என பேசியுள்ளார். 

    முன்னதாக 2019-ல் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அதற்கு ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்ததும், இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
    • பைசன் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

    இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd தளத்தில் இந்தாண்டிற்கான Top 10 Action / Adventure திரைப்பட தரவரிசைப் பட்டியலில் ஒரே தமிழ் படமாக 'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது

    இந்த பட்டியலில் 7வது இடத்தை லோகா, 8வது இடத்தை துரந்தர் ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை டீகாப்ரியோ நடிப்பில் வெளியான 'One Battle After Another' படம் முதலிடம் பிடித்துள்ளது.

    • அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    • நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மை டியர் சிஸ்டர். இவர்களுடன் அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    அக்கா-தம்பி பாசத்தை மையக்கருவாக கொண்டு படம் உருவாகி உள்ளது. 'என்னங்க சார் உங்க சட்டம்' புகழ் பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில் படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என பொங்கலை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


    • விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
    • இதன் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.

    ஒரே படத்தில் வெவ்வேறு கதைகள் இடம் பெறக் கூடிய 'ஆந்தாலஜி' வகைப் படங்களில் ஒன்று ஹாட்ஸ்பாட். கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. 'ஹாட்ஸ்பாட் 2' மச் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரின் படி இரண்டாம் பாகமும், முதல் பாகத்தை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

    இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜன.23ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
    • வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.

    2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.

    இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.

    கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.

    ஜன நாயகன் படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகதாததால் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரௌபதி 2 திரைப்படம் சுபாஷ் சந்திர போஸின் பிறந்ததினமான ஜனவரி 23 அன்று வெளியாகிறது. பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரௌபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

    எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    திரெளபதி 2 மிகப் பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23 ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த அறிக்கையை பகிர்ந்த மோகன் ஜி, "திரெளபதி2 மிகப் பெரிய உழைப்பு.. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
    • மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்தே 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு வரும் திங்ககிழமை (19.01.2026) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்
    • டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மறந்து போச்சே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

    ×