search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned"

    கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

    இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Poompuharbeach
    சீர்காழி:

    மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

    அப்போது காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் குளிக்க முடிவு செய்தனர். அப்போது சிவபிரியா, மஞ்சு, விவேகா ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இதில் சேற்றில் சிக்கி 3 மாணவிகளும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை கண்ட மற்ற மாணவிகள் செய்வதறியாமல் அச்சத்தில் அலறினர்.



    இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சேற்றில் சிக்கிய 3 மாணவிகள் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் 3 மாணவிகள் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதைமணல் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் இறங்கி குளிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை போலீசார் அங்கு வைத்திருந்தனர். ஆனால் கல்லூரி மாணவிகள் இதனை கவனிக்காமல் இறங்கி குளித்ததால் பரிதாபமாக பலியானது தெரியவந்தது.

    கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Poompuharbeach
    பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி கோவில் குருக்கள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வலையப்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). கோவில் குருக்கள். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் (23) ஆகிய 2 பேரும் குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்தபோது 2 பேரும் தண்ணீருக்குள் திடீரென மூழ்கினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி விக்னேசை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். ஆனால் பிரகாசை வெகு நேரம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் நங்கூரம், கயிறு உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி பிரகாஷ் உடலை மீட்டனர். இதற்கிடையே போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் தந்தை கணேஷ் இறந்து 15 நாட்கள் ஆவதற்குள் பிரகாஷ் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    திருவாரூரில் நண்பருடன் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    திருச்சி, அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது நண்பர் பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (38). தொழிலார்கள்.இவர்கள் லாரியில் நேற்று திருவாரூர் வந்தனர். அங்கு விளமலில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் இருவரும் குளித்தனர். ஆற்றில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் சிக்கி செல்வம் பலியாகி விட்டார். இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி பலியான செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தாராபுரம் அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்புத்துறைப்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ். மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19). கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடைய நண்பரான பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரகாசின் உடல் நலம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு நேற்று நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சபரீஸ்வரன் (19), பிரகாஷ் (19), கோகுல்நாத் (19) அருண்பாண்டியன் (19) வடுகபாளையத்தை சேர்ந்த மனோஜ் (20), புதுநவக்கொம்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (19), மோகன் (19) ஆகியோர் சென்றனர்.

    அங்கு அவரை பார்த்து விட்டு மதியம் 2 மணிக்கு அனைவரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அதன்படி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நவீன்ராஜ் தண்ணீரில் மூழ்கி னார். உடனே காப்பாற்றுங் கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்.உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நவீன்ராஜ் இறந்தார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தேடியபோது, அவருடைய உடல் அந்த பகுதியில் மிதந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று நவீன்ராஜ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    நண்பர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்புகாடு வைரா குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆரோன், (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆரோன் தனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் துறை பண்ணையூர் பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் குளிக்க சென்றார்.

    நண்பர்களுடன் ஆரோன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அவர், மூழ்கினார். இதைப்பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்களும், நண்பர்களும் ஆரோனை காப்பாற்ற முயன்றனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆரோன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. 

    இது குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார். தாய்-தங்கை கண் முன்னே இந்த பரிதாபம் நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பட்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸி (வயது 32). இவர்களுடைய மகள்கள் பவித்ரா தர்ஷினி (10) மற்றும் வைஷாலினி (8). பட்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பவித்ரா தர்ஷினி 4-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் வைஷாலினி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று காலையில் பட்டம்பாளையத்தில் உள்ள பெரியகுளத்திற்கு ரோஸி, பவித்ரா தர்ஷினி மற்றும் வைஷாலினி ஆகிய 3 பேரும் சென்றனர். இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வழியாக முதலில் ரோஸியும், அவரை தொடர்ந்து வைஷாலினியும், பவித்ரா தர்ஷினியும் கடந்து சென்றனர். முதலில் தண்ணீரை கடந்து ரோஸியும், வைஷாலினியும் சென்று விட்டனர். இவர்களுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த பவித்ரா தர்ஷினி கழுத்தில் போட்டிருந்த சால் (துணி) தண்ணீரில் விழுந்தது. அதற்குள் அந்த துணி குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது.

    இதையடுத்து பவித்ரா தர்ஷினி அந்த துணியை எடுக்க சென்றார். ஏற்கனவே குளத்தில் மண் அள்ளப்பட்ட இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது மாணவிக்கு தெரியவில்லை. இதையடுத்து அந்த துணியை எடுக்க முயன்றபோது திடீரென்று தண்ணீரில் மாணவி மூழ்கினாள். அப்போது “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் போட்டாள். மகள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த ரோஸி அதிர்ச்சியடைந்து அவளை காப்பாற்ற முயன்றார். அப்போது ரோஸியும் தண்ணீரில் மூழ்கினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டும், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ரோஸியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பவித்ரா தர்ஷினியை மீட்க முடியவில்லை.

    இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவினாசி தீயணைப்பு துறை வீரர்களும், பெருமாநல்லூர் போலீசாரும் விரைந்து சென்று பவித்ரா தர்ஷினியை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேரம் தேடலுக்கு பிறகு பவித்ரா தர்ஷினியின் இறந்த நிலையில் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்-தங்கை கண் முன்னே தண்ணீரில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவில் குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி கோவை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவை கணபதி கே.கே. நகரை சேர்ந்த சாமி- கவிதா தம்பதியின் மகன் பரத் (வயது 19). இவரது தம்பி தினேஷ். இவர்களது நண்பர்கள் சந்தோஷ் (18), சக்தி (19). இவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.

    நேற்று மாலை நெம்மாறை நெல்லிககுளக்கரை பகவதியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் திடீரென நண்பர் சக்தி ஆழமான பகுதியில் சிக்கி அலறினார்.

    அதிர்ச்சியடைந்த பரத் நண்பரை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் சக்தி தண்ணீரில் இருந்து தப்பி கரையேறினார். அவரை காப்பாற்ற குதித்த பரத் குளத்தில் மூழ்கினார்.

    கரையில் இருந்த மற்ற 3 பேரும் நெம்மாறை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து பரத்தை தேடினர். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர்.

    உடனே பரத்தை நெம்மாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் பரத் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×