என் மலர்
நீங்கள் தேடியது "young men death"
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமனில் இருளப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் கழிவு நீர் வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்து ராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த வாலிபருக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரது உடலில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது.
எனவே அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் அவர் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கோவை கணபதி கே.கே. நகரை சேர்ந்த சாமி- கவிதா தம்பதியின் மகன் பரத் (வயது 19). இவரது தம்பி தினேஷ். இவர்களது நண்பர்கள் சந்தோஷ் (18), சக்தி (19). இவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.
நேற்று மாலை நெம்மாறை நெல்லிககுளக்கரை பகவதியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் திடீரென நண்பர் சக்தி ஆழமான பகுதியில் சிக்கி அலறினார்.
அதிர்ச்சியடைந்த பரத் நண்பரை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் சக்தி தண்ணீரில் இருந்து தப்பி கரையேறினார். அவரை காப்பாற்ற குதித்த பரத் குளத்தில் மூழ்கினார்.
கரையில் இருந்த மற்ற 3 பேரும் நெம்மாறை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து பரத்தை தேடினர். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர்.
உடனே பரத்தை நெம்மாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் பரத் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






