search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstration"

    • திருவெறும்பூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வர கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

    திருவெறும்பூர்,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை யில் நடைபெற்றது,

    ஆர்பாட்டத்தில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்கள் மீது குறி வைத்து தாக்கி கொன்று குவிப்பதை கண்டித்தும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். மரக்காணம் அருகே கொள்ளு மேடு விநாய கர்கோவில் தெருவை சேர்ந்த தையல் தொழிலாளர் அய்யப்பன் மனைவி மீனாட்சி (வயது 32) அந்த ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் வழக்கம்போல் மீனாட்சி ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இது பற்றி தகவல் தெரிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சி உடலை கைப்பற்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்து போன மீனாட்சிக்கு10 வயது மற்றும் 7 வயதுடைய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் .தனியார் ஓட்டலில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன மீனாட்சி உடலை வாங்க மருத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    • சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம்:

    போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இது குறித்து மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

    பெரம்பலூர் டெண்டர் ஏலத்தில் மோதல்தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கல்குவாரி டெண்டரில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

    முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் அத்துமீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும் அடித்து தாக்கியதோடு, அரசு அலுவலக பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ள சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு மாவட்ட செயலாளர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று விசாரணை கைதியை தன் பொறுப்பில் அழைத்து வந்தார். அதை கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டார்.

    ஆனால் தி.மு.க .ஆட்சியில் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் ஒரு அமைச்சரின் உதவியாளர் தலைமையில் தாக்கிய தி.மு.க. வினர் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் மணல் கொள்ளை அடித்த வர்களை தடுக்க போன தாசில்தாரை லாரியை விட்டு ஏத்தி கொலை செய்து விட்டனர்.

    இது போல் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இதை பின்பற்றியே தி.மு.க .ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் பேசியபோது:-

    பெரம்பலூர் மாவட்டத்திற்குள் நடக்கும் கல்குவாரி டெண்டர்களில் அரியலூர் மாவட்டத்திலிருந்து அடி ஆட்களை அழைத்து வந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் அலுவலகத்தையும் தி.மு.க.வினர் அடித்து நொறுக்கினார்கள். கவர்னர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியபோதே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 356 சரத்தை பயன்படுத்தி இந்த தி.மு.க. ஆட்சியை கலைக்கவேண்டும் என தெரிவித்தார். பின்னர் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் குன்னம் குணசீலன், ராஜாராம், ராணி, வீரபாண்டியன், எ.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் கே.என். ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், ஏகேஎன் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சந்தைத்திடல் முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளருமான ஷாஜ ஹான் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச் செய லாளர்ஆலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தொகுதி எம்.பி.நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    மண்டபம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் லுத்துபுல்லா, ராமநாதபுரம் பாசிப்பட்டறைத்தெரு முஸ்லிம் ஜமாத் மேனேஜிங் டிரஸ்டி அசரப்அலி, டிரஸ்டி ஜபருல்லாஹ்கான், கீழக்கரை டவுன் ஹாஜி காதர்பக்ஸ், மாவட்ட உலமா சபை தலைவர் முஹம்மது இபுராஹிம், செயலாளர் ஜலால், ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சம்பா சாகுபடிக்கான தண்ணீர் உடனடியாக பெற்று தர வேண்டும்.

    2022- 23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டை மறு ஆய்வு செய்து உரிய இன்சூரன்ஸ் நிதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (சி.பி.ஐ சார்பு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

    விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முடித்து வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, காவிரி தாய் இயற்கை வழி வேளாண் நடுவம் சீர்.தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    • கல்குவாரி ஏலத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது வழக்கு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி கல் குவாரி ஏலம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க.வினரை தி.மு.க. வினர் அடித்து தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.வினரை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • 8-ந்தேதி நடக்கிறது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அ.தி.மு.க.வினர், எஸ்.பி. ஷ்யாம்ளாதேவியை சந்தித்து, கடந்த 30-ந்தேதி நடந்த கல்குவான் ஏலத்திற்கான டெண்டரின் போது அரசு அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கோரி மனு கொடுத்தனர்.

    பின்னர் அ.தி.மு.க .மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி கனிமம் மற்றும் சுரங்கம் புவியியல் துறை சார்பில், கல்குவாரி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கலந்துகொள்ள வந்தவர்களை 300க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சண்டையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளும், போலீசாரும், நிருபர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

    கலெக்டரே நேரில் வந்து கலவரம் நடக்கும்போது கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்த போதும் அவரையும் ஒருமையிலே மிரட்டியும், டெண்டர் போட வந்தவர்களை அரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டிய கோரக்காட்சி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேறியது. இந்த செயலை அ.தி.மு.க .சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் செயலை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 8-ந்தேதி காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

    மனு கொடுத்தபோது, மாவட்ட நிர்வாகிகள் குணசீலன் ராஜாராம், ராணி, வீரபாண்டியன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடம் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள நிலம் ஓட்டக்கோவில் பாறை செங்குளம் ஊரணி மற்றும் சவுந்தரபாண்டியன் கரடு என வருவாய்த்துறை ஆவணத்தின்படி உள்ளது. இந்த இடங்களில் உள்ள பாறையை சுற்று வட்டார கிராம விவசாயிகள் தானியங்களை உலர்த்தும் களமாகவும், போக்குவரத்துக்கு பொதுப்பாதையாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்றவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள 32,000- க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 2-ம் பணி தொகுதி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும். இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் அனைத்து தொழிற்சங்க தொழி லாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.
    • பேரணியாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பல வாரங்களாக வழங்கப்படாமல் இருக்கும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க கோரி திருக்காட்டுபள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் கரையில் இருந்து நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழக்கியபடி பேரணி யாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் கட்சியின்மாவட்ட செயற் குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், வருவாய் ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் ஆகியோர் நுதன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பூதலூர் தாசில்தார் மரியஜோசப் அளித்த உறுதியை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் வங்கி முன் பரபரப்பாக காணப்பட்டது.

    ×