என் மலர்
நீங்கள் தேடியது "electrical workers"
- மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
- மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவாரூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டம் சார்பில் மின் வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நகர உதவி செயற் பொறியாளர் சா.சம்பத் தலைமை தாங்கினார். முகாமில் பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் பணியாற்ற வேண்டும்.
மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கையுறை, இடுப்புக் கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின் பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும்.
இயற்கை இடா்பாடுகளால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து முன் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- மின்சார தொழிலாளர் சம்மேளன விழா நடந்தது.
- மத்திய கோட்ட செயலாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.
விருதுநகர்
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் விருதுநகர் வட்ட கிளை யின் சார்பில் தமிழக முதல் பொதுச் செயலாளர் டாக் டர் எஸ். சி.கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா, கல் வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா நடை பெற்றது.
விருதுநகர் மின் வாரிய மேற் பார்வை என் ஜினீயர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் ஆதி மூலம் தலைமையிலும், சம் மேளன துணைத்தலைவர் ராஜ் குமார் முன்னிலையிலும் நடந்த இந்த விழாவின் போது மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கல்வெட்டை திறந்து வைத்தார்.
மாநில தலைவர் தனசேகரன் சம்மேளன கொடியேற்றினார். சம்மேளன பொருளாளர் அருள் தாஸ் தொழிற் சங்க பலகையை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
பொருளாளர் கார்த்தி கேயன் வரவேற்றார். முடிவில் மத்திய கோட்ட செய லாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.
- மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள 32,000- க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 2-ம் பணி தொகுதி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும். இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் அனைத்து தொழிற்சங்க தொழி லாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
- மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
கே.கே.நகர்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.
திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
- உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
- மின்சார ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் மின்கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
ராமநாதபுரம்
மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மின்சார பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் பணிபுறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் பொறியாளா் முதல் கேங்மேன் வரை அனைத்துத் தரப்பினரும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் மின்கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சக்கரக்கோட்டையில் உள்ள மின் மேற்பாா்வையாளா் அலுவலக வளாகத்தில் பொறியாளா்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவா் ரவி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற தொழிலாளா்கள் மத்திய அரசின் புதிய மின்சாரத் திருத்த மசோதாவைக் கைவிடக் கோரி கோஷம் எழுப்பினர்.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் மேற்பார்வையாளர், பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் திருமலைச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திட்ட செயலாளர் உமாபதி, திட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், சி.ஐ.டி.யூ. துணைச் செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் தனசாமி, ஜெயசிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். #tamilnews






