search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstration"

    • விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

    சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பழனிராஜன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்.

    முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி. பி. எம். எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
    • சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ்நாடு வருவாய் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி-பிரிவில் இணைக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். எச்.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. நெல்லை பொதுச் செயலாளர் உலகநாதன், டி.டி.எஸ். மாநில துணைத்தலைவர் சந்தானம், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் மகாராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். சேவை துறையாக செயல்படும் போக்குவரத்து கழகங்களின், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி சாலை யில் முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஓ.பி.எஸ்.அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரதப் போ ராட்டம் நடத்துவோம். கடையடைப்பு, மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரப்பத்தி முத்தையா, காசிநாதன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செய லாளர் சசிக்குமார், உசிலம் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்மீன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் போத்திராஜன், அய்ய னார்குளம் ஜெயக்குமார், திருமங்கலம் ஒன்றிய செய லாளர் சிவா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர், கார்த்திகேயன், செல்லம்பட்டி சவுந்திர பாண்டி, வேங்கைமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.
    • செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகுகள் இருக்கும் போது மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. அங்கு பணிபுரிபவர்களில் 30 சதவீதம் பேர் இந்திக்காரர்கள்.

    மூன்றாவது சிப்காட் அலகுக்காக தமிழ்நாடு அரசு அப்பகுதியில் 3174 ஏக்கரில் விளைநிலங்களை கைப்பற்றுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதில் விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

    பல தரப்பினர் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஆறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை நீக்கினார்கள். ஆனால் பொறியாளரும் தீவிர சாகுபடியாளருமான அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்யவில்லை. தற்போது அருள் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

    சென்னை- சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் அருள்.

    அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டத்தை நீக்கவில்லை என தெரிகிறது.

    உடனடியாக அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறியது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் நிலங்களை பறிக்கிறார்கள்.

    மேலும் வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.

    வேளாண்மையை அழித்து தொழிற்சாலைகளை பெருக்குவது கிராமங்கள் அளிப்பதாகும். மிகையான தொழிற்சாலை பெருக்கம் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும்.

    எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை நீக்க வேண்டும்.

    செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பறித்த நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 30-ம் தேதி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பொருளாளர் மணிமொழியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பழ. ராஜேந்திரன், சாமி கரிகாலன், செயற்குழு வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ஜெயக்குமார், தமிழ் தேசியப் பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை , இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போட ப்பட்ட குண்டர் சட்டத்தை கண்டித்தும், சிறையில் உள்ள விவசா யிகளை விடுதலை செய்ய கோரியும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சீர்காழி நகர தலைவர் கோவி.நடராஜன் தலைமை வகித்தார்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கணேசன், இயற்கை விவசாயி நலம்.சுதாகர், அபாஸ்அலி,அரவிந்தன்,செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஆ.ராமலிங்கம் ,ஜெக.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசா யிகள் பேரணியாக சென்று உ.அர்ச்சனாவிடம் விவசாயிகளின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல்கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை வரி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    விளாத்திகுளம்:

    தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல் கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செல்வமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்று பேசினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி கூறினார். இதில் முனியசாமி, ரஹ்மான், செல்வம், காளி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
    • முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து சீர்காழி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சீத.லெட்சுமனன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஞான சம்பந்தம், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செய லாளர் கணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சரத்சந்திரன், நவாஸ், மாவட்ட பொருளாளர் சிவராமன், ராஜா, ஒன்றிய குழு துனை தலைவர் பானு சேகர், மகிளா காங்கிரஸ் தலைவி சித்ரா செல்வி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரவிற்கிணங்க தஞ்சை வட்டார காங்கிரஸ் சார்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன கோட்ட அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை வட்டாரத்த லைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கில் கோ.அன்பரசன் துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிவாஜி சமூகநல பேரவைத்தலைவர் சதா. வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி இளைய பாரத், மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் கலைச்செல்வன், கோபாலய்யர், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் களிமேடு முருகானந்தம், பாரதிதாசன், சுவீதா ஞானப்பிரகாசம், மாரியம்மன்கோவில் ராமமூர்த்தி, மருங்குளம் உத்திராபதி, நாகராஜ், ஆனந்த முருகன், வீணை கார்த்தி, சிவக்குமார், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
    • அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அசோக் குமார், சேகர், ராமலிங்கம், பழனி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வினோத்குமார், ஆதி திராவிடர் துறை மாநில துணைத்தலைவர் அன்புதாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்

    • ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பேச்சுவார்த்தையின் போது கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது இலந்தைகுளம். இதன் அருகில் பாளையங்கோட்டை ரெயில் நிலையம், அறநிலையத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், அதனருகில் காவலர் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம், இலந்தை குளத்திற்கு மேற்கே ராஜேந்திரன் நகர் உள்ளது.

    இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இலந்தை குளத்தில் அன்பு நகரில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுவதுமாக கலப்பதால் குளம் மாசடைந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை இலந்தை குளத்தில் கலக்கும் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா, சங்கர பாண்டி யன், காங்கிரஸ் நிர்வாகிகள் மாரியப்பன், வெள்ளை பாண்டியன், ராஜேந்திரன், கங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தகவல் அறிந்து உதவி போலீஸ் கமிஷனர் காளிமுத்து, இன்ஸ்பெக்டர் முருகன், சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×