என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
- திருவெறும்பூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வர கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன
திருவெறும்பூர்,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை யில் நடைபெற்றது,
ஆர்பாட்டத்தில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்கள் மீது குறி வைத்து தாக்கி கொன்று குவிப்பதை கண்டித்தும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






