search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வினரை கண்டித்துஅ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    தி.மு.க.வினரை கண்டித்துஅ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் டெண்டர் ஏலத்தில் மோதல்தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கல்குவாரி டெண்டரில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

    முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் அத்துமீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும் அடித்து தாக்கியதோடு, அரசு அலுவலக பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ள சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு மாவட்ட செயலாளர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று விசாரணை கைதியை தன் பொறுப்பில் அழைத்து வந்தார். அதை கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டார்.

    ஆனால் தி.மு.க .ஆட்சியில் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் ஒரு அமைச்சரின் உதவியாளர் தலைமையில் தாக்கிய தி.மு.க. வினர் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் மணல் கொள்ளை அடித்த வர்களை தடுக்க போன தாசில்தாரை லாரியை விட்டு ஏத்தி கொலை செய்து விட்டனர்.

    இது போல் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இதை பின்பற்றியே தி.மு.க .ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் பேசியபோது:-

    பெரம்பலூர் மாவட்டத்திற்குள் நடக்கும் கல்குவாரி டெண்டர்களில் அரியலூர் மாவட்டத்திலிருந்து அடி ஆட்களை அழைத்து வந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் அலுவலகத்தையும் தி.மு.க.வினர் அடித்து நொறுக்கினார்கள். கவர்னர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியபோதே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 356 சரத்தை பயன்படுத்தி இந்த தி.மு.க. ஆட்சியை கலைக்கவேண்டும் என தெரிவித்தார். பின்னர் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் குன்னம் குணசீலன், ராஜாராம், ராணி, வீரபாண்டியன், எ.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் கே.என். ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், ஏகேஎன் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×