search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compensation"

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
    • பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
    • மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம், ராராம்புத்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    தற்போது கதிர்வந்த பருவத்தில் உள்ள நெல் பயிர் எதிர்பாராமல் ஏற்பட்ட சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதம டைந்துள்ளது.

    இதுபோன்று அம்மா பேட்டை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.

    அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    • கைப்பற்றிய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பாதரக்குடி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தற்போது மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது. இந்த சாலையானது ஊரின் மையப்பகுதியில் செல்கிறது. இதனால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. புஞ்சை, நஞ்சை நிலங்கள் கையகப்படுத்தும் நேரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர்-ஆணைய அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து கைப்பற்றப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் விலை போகும் சென்ட் இடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இதை கண்டித்து பாதரக்குடி ஊராட்சியில் இந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாலைப் பணிக்காக நிலங்களை இழந்தவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும், தங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    • புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
    • மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

    மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.

    இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    • உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

    இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

    இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

    தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் 31 பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் இந்தியர்கள் ஆவர். முகமது உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3.4 மில்லியன் திர்ஹம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    இந்த விபத்தில் படுகாயங்கள் அடைந்த முகமது துபாயில் உள்ள மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். 14 நாட்கள் சுயநினைவின்றி இருந்தார். அதன் பிறகு மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றார்.

    விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது. மேலும், அவரது மண்டை ஓடு, காதுகள், வாய், நுரையீரல், கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களும் தடயவியல் மருத்துவ நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

    முகமதுவின் மூளையில் 50 சதவீதம் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையின் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இதன்மூலம் முகமதுவுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.
    • விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பூர் :

    தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழிகாட்டுதலின் படியும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் 2020 ஆம் ஆண்டு தனது காரில் தாய், மனைவி, குழந்தை ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் வினோத்குமார் பலியானார். இந்த விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் கணவனை இழந்த மனைவி மற்றும் குழந்தைக்கு ரூ.90 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதனை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழங்கினார்.

    • சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.
    • அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.

    இதில் நதியா மற்றும் இவரது மகன் விக்ராந்த் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இழப்பீடு கேட்டு நதியா சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆட்டோ டிரைவர் வைத்திருந்த இன்ஸ்சூரன்ஸ் ஆவணங்கள் போலியானது என சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீசில் புகார் அளித்திருந்தது.

    இதையடுத்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டுள்ளது
    • புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள தெற்கு ஆயுதக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் அருள்தாஸ்(வயது50). இவரது மனைவி ஜெயக்கொடி.கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதத்தில், வீடு கட்டுவதற்காக கும்பகோணத்திலுள்ள எக்வீடாஸ் சிறு நிதி வங்கியை அணுகி ரூ.7.50 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஜெயக்கொடி கடன் பெற்ற போது தனது கணவர் அருள்தாஸ்க்கு பாத்தியப்பட்ட சொத்தை பிணையமாக நிதி நிறுவனத்துக்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளார்.

    கடன் வழங்கிய அந்த வங்கி, இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக் கடனுக்கான பாலிசியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயக்கொடி இறந்து விட்டார். இதையடுத்து அருள்தாஸ், தமது மனைவி இறந்துவிட்டதை தெரிவித்து இன்சூரன்ஸ் மூலம் கடனை முடித்துக்கொண்டு, தாம் எழுதிக் கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து, அதனை திரும்பத் தருமாறு வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு நிர்வாகம்,  இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரை மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தினால் இன்சூரன்ஸ் பணம் வந்த பின்னர் ஜெயக்கொடி இறந்த பின்பு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அடமானத்தை ரத்து செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை நம்பி அருள்தாஸ் ஜெயக்கொடி இறந்த பின்னரும் மாதாந்திர தவணை தொகை ரூ.57 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே மாதம், மொத்த கடனையும் திரும்ப செலுத்துமாறு இறந்தவர் பெயருக்கு வங்கி நிர்வாகம் அறிவிப்பு அனுப்பியதைக் கண்டு அதிரிச்சியடைந்த அருள்தாஸ், நிதி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்ததாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் என். பாலு, வீ. லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் சேவை குறைபாட்டிற்காக மேற்கண்ட வங்கி இழப்பீடு தர வேண்டும். புகார்தாரரின் மனைவி இறந்த பின்பு வசூலிக்கப்பட்ட ரூ.57 ஆயிரத்தை புகார்தாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும் புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • துணை தாசில்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அலுவலகத்தின் எதிரில் உள்ள மர நிழலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
    • தாசில்தார் பெர்ஷியா ஆர்ப்பாட்டக்காரர்களிடம்நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பூதலூர் தாலுகா அலுவலகம் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழை, பருவம் தம்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்குரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும், சேத பாதிப்புகளை வேளாண் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தங்கமணி, ஜெயபால், சதீஷ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி ஒன்றிய குழுவின் துரைராஜ், சம்சுதீன், செந்தில்குமார், பாரதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்ட த்தின் முடிவில் தங்களிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொள்ள தாசில்தார் அலுவலகத்தில் இல்லாததால் அவர் வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்து தாலுகா அலுவலகத்தில் முன்பு உட்கார்ந்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.

    கடுமையான வெயிலில் கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் போலீசார் மற்றும் துணை தாசில்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அலுவலகத்தின் எதிரில் உள்ள மர நிழலில் அமர்ந்து கோஷங்களை முழக்கினார்கள்.

    நேற்றுமுற்பகல் 12 மணி அளவில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியாஆர்ப்பாட்டக்காரர்களிடம்நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். கோரிக்கை ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டமாக மாறியதால் தாலுகா அலுவலக பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×