search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students"

    • சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது.
    • சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில் சுகைலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் கோட்டயம், கலால் பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 220 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரிய வந்தது.

    • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பாளையில் நடைபெற்றது.
    • பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    தலை நிமிரும் தமிழகம் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்த ப்பட்டது. இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மரியதாஸ் முன்னி லை வகித்தார். சிறுபான்மை யினர் நல ஆணையத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பா ளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் வரவேற்றார். அப்துல்வகாப் எம். எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சா யத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கி ணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான அழகிரிசாமி நோக்க உரையா ற்றினார். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.

    மாவட்ட அளவில் நடை பெறும் இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கு வார்.

    பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிரு க்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம். எல். ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமானது கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உருவாகி வரும் ஒரு சோலார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் மூலம் 1600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு 1,536 பேர் பதிவு செய்திருந்தனர். 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட 10,12-ஆம் வகுப்பு, பாலி டெக்னிக், பட்டப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங் ஆகிய துறைகளை சேர்ந்த பட்டம் பெற்ற அல்லது இறுதி ஆண்டு மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

    இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த படித்த மகளிர்கள் கலந்து கொண்டனர். தேர்ந்தெடு க்கப்பட்ட மகளிர்கள் அடுத்த 6 - 10 மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    • மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது.
    • சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் இணைந்து, முதலிபாளையத்தில் நிப்ட்-டீ கல்லூரியை செயல்படுத்துகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்.சி., அப்பேரல் பேஷன் மேனேஜ்மென்ட் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் பாடத்தின் ஒரு பகுதியாக, சுயமாக ஆயத்த ஆடை ரகங்கள் தயாரித்துள்ளனர். மாணவ, மாணவிகள் 22 பேர், ஏழு குழுக்களாக பிரிந்து பின்னல் துணியில் டி-சர்ட் தயாரித்துள்ளனர்.நூல் கொள்முதல் செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, கல்லூரியில் உள்ள நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி, பின்னல் துணி உருவாக்கியுள்ளனர்.

    பிக்யூ, டபுள் பிக்யூ, ஹனி கோம்ப், டுவில், ஜக்கார்டு, பிளீஸ் வித் ரெய்ஸ்டு, பிளைன் இன்டர்லாக் உள்ளிட்ட நிட்டிங் டிசைன்களில் துணி உற்பத்தி செய்து, சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர். வெவ்வேறு அளவீடுகளில் பின்னல் துணியை வெட்டி, அழகிய டி-சர்ட் தயாரித்துள்ளனர். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றுவதுபோலவே, டி-சர்ட்களின் காலர் பகுதியில் அளவீடு லேபிள் மற்றும் ஆடையை கையாளும் விவரங்களுடன் கூடிய வாஷ்கேர் லேபிள் இணைத்து, பாலிபேக்குகளில் அடைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் கண்ணன் கூறுகையில், தாங்கள் தயாரித்த ஆடைகளின் அடக்கவிலையை மாணவர்கள் சரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் மிக்க மெர்ச்சன்டைசர்களின் கணக்கீட்டின்படி, மொத்த ஆடை தயாரிப்புக்கு ஆகும் செலவின அடிப்படையில், விலையை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் கல்வி கற்கும்போதே ஆடை உற்பத்தி நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதல் குறித்து நன்கு தெரிந்துகொள்கின்றனர். எதிர்காலத்தில் பின்னலாடை உற்பத்தி தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த அனுபவம் கைகொடுக்கும் என்றார்.

    • 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
    • கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராயபுரம் அணை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஜய் (வயது 24). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு விஜய் சூசையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரு க்கும் ஹரிஹரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஹரிஹரன் நண்பர்களும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாண வர்கள் ஹரிஹரன்(23), பிரகதீஸ்வரன்(21), ஸ்ரீநிவாஸ் (19), கவுதம் (21), ஹரிஷ் (19) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 27-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிரப்பி முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒரு கல்லூரியில் இருந்து பங்கேற்க முடியும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசு தொகையாக ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • மாநில கல்வி கொள்கை குறித்து தெக்கூர் கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி கருத்துகளை கேட்டறிந்தார்.
    • இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தமிழக அரசு மாநில அளவில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கருத்துருவை தயாரிப்பதற்கான குழுவை நியமித்துள்ளது.

    இவ்வாறு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் தலைவர்-முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை புரிந்து மாணவ, மாணவிகளை சந்தித்து தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார்.

    கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தற்போது நடைமுறையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறைகள், தேர்வு முறைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், ஆசிரியர் -மாணவர் உறவு முறை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கையாள்வது?, பாடங்களை புரிந்து படித்து தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது என்ற வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார்.

    பின்னர் கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வி தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து அறிவுரை வழங்கி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடி கல்லூரி நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?, கல்லூரியின் தரத்தை முன்னேற்றம் அடையச்செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.

    இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

    பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
    • தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
    • தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விதிமுறை களை மீறி செல்வோரை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.

    அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். ரிசர்வ் லைன், ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 5 பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கோசாகுளம், பெரியார் நகர் வல்லரசு (வயது 33), ஆனையூர் குமார் மகன் அருண் பாண்டியன் (23), கோசாகுளம், பாண்டியன் நகர் கண்ணன் மகன் வருண் பாலாஜி (24), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் நசீர் உசேன் மகன் முஜிபுர் ரஹ்மான் (19) மற்றும் தபால் தந்தி நகர், பார்க் டவுன் ஆதிஸ்வரன் மகன் சிவபாலன் (23) என்பது தெரியவந்தது. அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மதுரை கட்ட பொம்மன் நகர் சந்திப்பு முதல் 50 அடி ரோடு வரை அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 3 மோட்டார் சைக்கிள்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மதுரை குருவிக்காரன் சாலை சினிமா தியேட்டர் முன்பு அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக சிம்மக்கல், அபிமன்யு தெரு கருப்பையா மகன் சந்தோஷ் (19), கே.கே.நகர், பாரதியார் தெரு ராமலிங்கம் மகன் கவுரவ் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை குருவிக்காரன் சாலை ஆஸ்பத்திரி அருகே அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அய்யர் பங்களா, அய்யாவு நகர் சிதம்பரம் மகன் தீபக் (24), தல்லாக்குளம் பச்சைக்கிளி மகன் சூர்யா (21) ஆகிய 2 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.

    • மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
    • செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர்.

    சங்கரன்கோவில்:

    கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். கல்லூாி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிாியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் கோமதி, குமாா் ஆகியோா் மாணவர்களை வழிநடத்தினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் புன்னைவனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்த செயலியின் பயன்பாடுகள் குறித்து, அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் விவரித்தனர். அந்த செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர். இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிாியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் விவரித்தனர்.

    கீழக்கரை நகராட்சி சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
    கீழக்கரை 

    கீழக்கரை நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் மக்கும் குப்பைகளை தனியாகவும், மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்து தருவது குறித்த விழிப்புணர்வு பேரணி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. 

    ஆணையாளர் செல்வராஜ், நகர் மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் மீரான் அலி, துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் வழி நெடுகிலும் பதாகைகளை ஏந்தியவாறு “பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டோம்” பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம்” என்றும் “நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம்” என்றும் “என் குப்பை எனது பொறுப்பு” என்று கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். 

    கீழக்கரை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடற்கரையில் நிறைவடைந்தது.

    ×