என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள் செயலியின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த காட்சி
உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு, வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
- மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
- செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர்.
சங்கரன்கோவில்:
கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். கல்லூாி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிாியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் கோமதி, குமாா் ஆகியோா் மாணவர்களை வழிநடத்தினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் புன்னைவனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்த செயலியின் பயன்பாடுகள் குறித்து, அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் விவரித்தனர். அந்த செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர். இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிாியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் விவரித்தனர்.






