search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens day"

    • புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி

    புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் பள்ளி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். டாக்டர் ரங்கநாயகி ரத்தினவேல், காமராஜன், ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை, எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல், கதை மற்றும் கவிதை கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிாியா் மாரிக்கனி சிறப்புரையாற்றினார். மாணவி தாரசா மீனாட்சி வரவேற்று பேசினார். வழங்கினாா், மாணவி அழகு லச்சிதா நன்றி கூறினார். மாணவி அஸ்வினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிாியைகள் மகாராணி மற்றும் அபிதா ஆகியோர் செய்திருந்தனா்.

    • 1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.
    • மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. 1-ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஓவியம் வரைதல், கட்டுரை, இசைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.

    அறக்கட்டளையின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் உபதலைவர்கள் முருகசாமி, குப்புசாமி , செயலாளர் கீதாஞ்சலி ,கோவிந்தப்பன் ,பொருளாளர் கந்தசாமி , இணைச்செயலாளர் துரைசாமி ,பள்ளியின் முதல்வர் சுமதி,துணை முதல்வர் விஜயா மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு நெல்லை தொழிலாளர் உதவி ஆய்வாளர் நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், குழந்தைத்தொழிலாளர் முறையினை அகற்றுதல் மற்றும் 1098 குழந்தைகள் ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
    • நேருவின் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

    நேருவின் திருவுருவப் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்கள் நேரு பாடல் பாடினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.
    • குழந்தைகளின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள் ஆகும். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    • சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்

    சென்னை:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    "இன்று மிகவும் சிறந்த நாள்;

    எங்கள் நேரு பிறந்தநாள்;

    அன்பு மாமா உலகிலே

    அவதரித்த புனித நாள்!

    அன்று சிறிய குழந்தையாய்,

    அலகாபாத்தில் பிறந்தவர்

    என்றும் நமது நெஞ்சிலே

    இருந்து வாழும் உத்தமர்!"

    - என நேரு அவர்களைப் போற்றிப் பாடினார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. பண்டித நேரு அவர்கள் குறித்து "நேருவும் குழந்தைகளும்", "நேரு தந்த பொம்மை" ஆகிய நூல்களை இயற்றியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களைப் பாடியுள்ள அவரது நூற்றாண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம். எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு. குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

    இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

    குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.

    குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு. கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். "குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-  

    குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித் அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்!

    ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!

    குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.  

    குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!

    குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.
    இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் தன் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இந்நன்னாளில் குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எம்.ஜி. ஆர். குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். அம்மா அதனை விரிவுபடுத்தியதோடு, குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
    ×