search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens day"

    • குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சம்பத் எம்.எல்.ஏ., சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சரோஜா பாபு, துணை முதல்வர் மதிவாணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் மனையியல் துறையின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பசார்பு செயலர் சவுமியா கலந்துகொண்டு மாறு வேடம், கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல், பாட்டு போட்டி உள்ளிட்டவைகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மனையியல் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் ஆசிரியை தேவிபிரியா நன்றி கூறினார்.

    • புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.
    • ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவர்கலால் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி ஆசிரியர்களின் நடனம், நாடகம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோ லியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றார்.

    மாணவர்கள் பங்கேற்ற குழந்தைகள் தின பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் பள்ளி நூலகத்திற்கு பல்துறை சார்ந்த 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.

    • முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது.
    • இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    தென்காசி:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குழந்தைகளும் வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா குழந்தைகளை வாழ்த்தி ஆங்கிலப் பாடலை பாடினார்.

    பொது அறிவுப் போட்டி , விளையாட்டுப் போட்டிகளைத் தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரி யர்கள் தங்களது மாணவ , மாணவிகளுக்கு குழந்தை கள் தின நினைவாக சிறப்பு அன்பளிப்பை வழங்கினர். பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரி யர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினர்.

    • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது

    பல்லடம் :

    பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் தர்மராஜ் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் பள்ளி செயலாளர் மலர்க்கொடி தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர் புவன் சக்கரவர்த்தி, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

    நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
    • நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியவத்துவம் குறித்து சிறு நாடகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நேருவின் வரலாறு குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி பெரியதெருவில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம் தலைமை தாங்கி, நேரு வேடம் அணிந்து வந்த சிறுமிகள், கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நேருவின் வரலாறு, குழந்தைகள் மீதான அவரது பாசம் குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார். இதில் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சுகிர்தா, அங்கன்வாடிப் பணியாளர்கள் சுபா, சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானுர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டது.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் வண்ண வண்ண உடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன். ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • விழாவில் 2,800 பள்ளி மாணவிகளுக்கு விதைபந்து பேனா வழங்கப்பட்டது.
    • விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி 2,800 பள்ளி மாணவிகளுக்கு இயற்கையால் செய்யப்பட்ட விதைபந்து பேனா வழங்கினார்.

    இதில் பேசிய துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நமது பாரம்பரிய அகத்தி, வேப்பமரம் போன்ற மரங்களின் இருக்கும் விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும். பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டு அந்த மரத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு மரம் வளர்க்கும் மாணவிகளுக்கு உங்கள் ஆசிரியர், பெருமக்களின் உதவியோடு அதற்கான ஊக்கமும் பரிசும் நான் நிச்சயம் தருவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அனார்கலி, பகுதி துணைச் செயலாளர் அப்துல் சுபஹானி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் உமா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன்சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் சமூக நலத்துறை பணியாளர்கள், செவி லியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறையினர் பங்கேற்று குழந்தை சுயபாதுகாப்பு அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பதாகை ககளை ஏந்தி சென்றனர்.

    இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தொழிலாளர் உதவி இணை ஆணையர் திருநந்தன், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×