search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் தினவிழா"

    • பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றார்.

    மாணவர்கள் பங்கேற்ற குழந்தைகள் தின பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் பள்ளி நூலகத்திற்கு பல்துறை சார்ந்த 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.

    • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது

    பல்லடம் :

    பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் தர்மராஜ் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் பள்ளி செயலாளர் மலர்க்கொடி தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர் புவன் சக்கரவர்த்தி, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது.
    • 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் உமா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன்சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் சமூக நலத்துறை பணியாளர்கள், செவி லியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறையினர் பங்கேற்று குழந்தை சுயபாதுகாப்பு அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பதாகை ககளை ஏந்தி சென்றனர்.

    இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தொழிலாளர் உதவி இணை ஆணையர் திருநந்தன், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர்செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பள்ளி ஆசிரியை ரஞ்சிதா வரவேற்று பேசினார்.

    மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பள்ளியின்முதல்வர் பிரமோதினி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். இந்நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின்ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.
    • மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. 1-ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஓவியம் வரைதல், கட்டுரை, இசைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.

    அறக்கட்டளையின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் உபதலைவர்கள் முருகசாமி, குப்புசாமி , செயலாளர் கீதாஞ்சலி ,கோவிந்தப்பன் ,பொருளாளர் கந்தசாமி , இணைச்செயலாளர் துரைசாமி ,பள்ளியின் முதல்வர் சுமதி,துணை முதல்வர் விஜயா மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
    • மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் ஆசிரியர்கள்- மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மதியம் சிறப்பு விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.

    • விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன.
    • விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி வெள்ளிவிழா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்முதல்வர் பிரியா ராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன. குழந்தைகள் நேரு போலவே வேடமிட்டு வந்து உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவின்நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×