குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி

சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com