திருமுருகன்பூண்டிஏ.வி.பி., பள்ளியில் குழந்தைகள் தினவிழா

விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன.விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏ.வி.பி., பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட காட்சி. 
ஏ.வி.பி., பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட காட்சி. 
Published on

திருப்பூர்:

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி வெள்ளிவிழா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்முதல்வர் பிரியா ராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன. குழந்தைகள் நேரு போலவே வேடமிட்டு வந்து உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவின்நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com