search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பாரதி மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

    பல்லடம் பாரதி மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

    • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது

    பல்லடம் :

    பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் தர்மராஜ் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் பள்ளி செயலாளர் மலர்க்கொடி தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர் புவன் சக்கரவர்த்தி, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×